Share on Social Media

Covid question: கிராமத்தில் என் உறவினர் ஒருவருக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. மறுநாளே கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். டெஸ்ட்டில் பாசிட்டிவ் என மூன்றாம் நாள் தெரிந்தது. இதனால் அவருக்கு பாதிப்பு அதிகரிக்குமா?

– ஜீவீ (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

“இந்த விஷயத்தில் இரண்டு சந்தேகங்கள் எழலாம்.

`உங்கள் உறவினர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியின் விளைவால் தொற்று பாதிப்பு அதிகமாகுமா?’

`அடுத்தது இந்தத் தொற்றின் காரணமாக ஆன்டிபாடி உருவாவது குறையுமா?’

கொரோனா தொற்று பாதித்திருப்பது தெரியாமல் அதற்கெதிரான தடுப்பூசியை எடுத்துக்கொண்டதால் அவருக்கு தொற்றின் தீவிரம் இன்னும் அதிகரிப்பதற்கோ, இந்தத் தடுப்பூசி அவரது உடலில் ஆன்டிபாடி உற்பத்தியைக் குறைக்கும் என்பதற்கோ வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

ஆனால் இந்த நபரை நாம் தொற்று பாதித்தவராகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, தடுப்பூசி எடுத்துக்கொண்டவராகப் பார்க்கக்கூடாது. மருத்துவர் அவரைப் பரிசோதித்து, ஆக்சிஜன் அளவைப் பார்த்து, தொற்றின் தீவிரம் குறைவாக இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும், மிதமாகவோ, அதிகமாகவோ இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கவும் அறிவுறுத்துவார். சிடி ஸ்கேன் உள்ளிட்ட அவசிய பரிசோதனைகளை எடுக்கச் சொல்வார். மற்ற கோவிட் நோயாளிகளைப் போலத்தான் அவரையும் அணுகுவார்.

சரி… இந்த நபருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி எப்போது போட வேண்டும் என்றொரு கேள்வி வரும். கொரோனா பாதித்த நபருக்கு 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட வேண்டும். இவர் இரண்டாவது டோஸ் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்”.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed