Share on Social Media

வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அவை உயிரிழந்ததை அடுத்து வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களிடம் கொரோனா பயம் அதிகரித்திருக்கிறது. வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்றவற்றுக்கும் கொரோனா தொற்று அபாயம் உள்ளதா?

– அஸ்வின் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்.

“கடந்த வருடத் தகவல்களின் படி ஃபீலைன் (Feline) இனத்தைச் சேர்ந்த பூனை போன்ற உயிரினங்களுக்கு மட்டும்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டின் மத்தியில் நியூயார்க்கின் பிரான்க்ஸ் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்கடுத்து அத்தகைய செய்திகள் இல்லை. சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து சிங்கங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதைக் கேள்விப்படுகிறோம்.

கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்

கால்நடை மருத்துவர் ப்ரியதர்ஷினி கோவிந்த்

கொரோனா வைரஸ் என்பது மிகப்பெரிய குழுவைச் சேர்ந்தது. அதில் கோவிட் 19 என்பது மனிதர்களைத் தாக்குகிறது. அது பூனை இனங்களையும் பாதிக்கலாம் என்பது சில நிகழ்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அது வேறெந்த உயிரினங்களையும் பாதித்ததாகத் தகவல்கள் இல்லை.

இது தவிர்த்து நாய்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸும் உண்டு. நாய்கள் அந்தத் தொற்றுக்குள்ளாகும்போது ஒன்றிரண்டு நாள்களுக்கு மட்டும் வாந்தியும் வயிற்றுப்போக்கும் இருக்கும். வயிற்றுப்போக்கில் லேசான ரத்தம் வெளிப்படலாம். இந்த அறிகுறிகள் எல்லாமே தானாகவே சரியாகிவிடும்.

அந்தத் தொற்றுக்கான தடுப்பூசியும் 30 வருடங்களுக்கும் மேலாக புழக்கத்தில் இருக்கிறது. வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை பெரும்பாலும் அது ஓரினத்தை மட்டும்தான் பாதிக்கும். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களுக்கு வரும் சாதாரண சளி, காய்ச்சலோ, ஃப்ளூ தொற்றோ நாய்கள், பூனைகள், ஆடுகள், மாடுகளுக்கெல்லாம் பரவாது. அதே போல அந்த உயிரினங்களுக்கு வரும் தொற்றும் மனிதர்களைப் பாதிக்காது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *