Share on Social Media

என் நண்பர் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான மருந்துகளை எடுத்துவருகிறார். இந்நிலையில் அவர் கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

– பழனி சித்ரா (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“எந்தவகையான புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களும் அதற்கான சிகிச்சை மேற்கொண்டவர்களும் கண்டிப்பாக கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். சிலவகை புற்றுநோய்களுக்கு முதலில் கீமோதெரபி போன்ற தீவிர சிகிச்சை கொடுத்துவிட்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் சாப்பிடும்படியான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.

உங்களுடைய நண்பர் இதில் எந்தக் கட்ட சிகிச்சையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் `ஆக்டிவ் கீமோதெரபி’ சிகிச்சையில் இருக்கிறார் என்றால், இரண்டு கீமோதெரபிக்களுக்கு இடையே, அதாவது ஒரு கீமோதெரபி எடுத்து ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கீமோதெரபியெல்லாம் முடிந்துவிட்டது, ஃபாலோஅப் சிகிச்சையில் இருக்கிறார் என்றால் எப்போது வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *