Share on Social Media

நான் 18.5.2021 அன்று கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அடுத்த 4 நாள்கள் கழித்து காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் இருந்தது. டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதியானது. அதையடுத்து 4 நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நிலையில் நான் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டுமா?

– கார்மல் ராஜன்(விகடன் இணையத்திலிருந்து)

Dr. சஃபி சுலைமான்

Dr. சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

“நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போட்ட பிறகு நான்கு நாள்கள் கழித்து உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு நான்கு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறீர்கள். எனவே மொத்தமாக உங்களுக்கு எட்டு நாள்கள் இந்த பாதிப்பு இருந்திருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் தவணை போட்டுக்கொண்டு 85 நாள்கள் கழித்தே இரண்டாவது தவணை போட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள். நீங்கள் முதல் டோஸ் போட்டுக்கொண்ட மே 18-ம் தேதியிலிருந்து கணக்கிட்டாலே இரண்டாவது தவணைக்கு இன்னும் ஒன்றரை மாதம் அவகாசம் இருக்கிறது. இந்நிலையில்தான் உங்களுக்குத் தொற்று வந்திருக்கிறது. அதன் காரணமாக உங்கள் உடலில் இயற்கையாகவே ஆன்டிபாடிக்கள் உருவாகியிருந்தாலும் அவை முழுமையாக நியூட்ரலைசிங் ஆன்டிபாடிக்களாக மாறாது. இதை எளிமையாக விளக்குகிறேன்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *