Share on Social Media

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது லேசான தலைவலியும் உடல் அசதியும் இருந்தது. இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளும்போதும் அந்த அறிகுறிகள் இருக்குமா? எத்தனை நாள்களுக்கு அந்த அறிகுறிகள் நீடிக்கும்? ரத்தம் உறைதல் பாதிப்பு வருமா?

– ஆறுமுகச்சந்திரன் (விகடன் இணையத்திலிருந்து)

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற அறிகுறிகள் எதுவும் ஏற்படவில்லை என்றால் தடுப்பூசியின் மருந்து வேலை செய்யவில்லை என்கிறார்களே… அது உண்மையா?

– அழகுசுந்தரம் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

மருத்துவர் சசித்ரா தாமோதரன்

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

“கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் போட்டுக்கொண்டபோது காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் வந்து, அடுத்த டோஸில் அவை இல்லாமலிருக்கலாம். முதல் டோஸில் அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு இரண்டாவது டோஸில் அறிகுறிகள் தென்படலாம். அல்லது இரண்டு டோஸ்களிலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் வரலாம். அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். தடுப்பூசியின் மூலம் ஒரு ஆன்டிஜெனை உடலுக்குள் கொடுக்கிறோம். அது உடலுக்குள் எத்தகைய ரியாக்ஷனை ஏற்படுத்துகிறது என்பதுதான் இது. அதற்கு நீங்கள் முதலில் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *