Share on Social Media

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்ட பின்பு எத்தனை நாள்கள் கழித்து தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்?

– சரவணன் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ஸ்ரீதேவி

மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“கொரோனா தடுப்பூசிக்கும் இல்லற வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, உறவில் ஈடுபட இத்தனை நாள் இடைவெளி விட வேண்டும் என்கிற மாதிரி எந்தக் கணக்கும் இல்லை. ஆனால், தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து ஒரு மாதம்வரை தாம்பத்திய உறவின்போது கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதும் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதும் சிறந்தது. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, கருத்தரிப்பவர்களுக்கு அந்தக் கருவில் பிரச்னைகள் வந்ததாக இதுவரை எந்தத் தகவலையும் நாம் கேள்விப்படவில்லை.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *