Share on Social Media

Covid question: நான் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டேன். இரண்டாவது டோஸ் போட்டுக்கொண்ட பதினைந்து நாள்கள் கழித்து ஒரு ஆக்ஸிடன்ட்டில் எனக்கு அடிபட்டது. அதற்காக டிடி ஊசி போடப்பட்டது. அது ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்துமா?

– விஜய்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

“நீங்கள் உங்களுக்கு விபத்து நடந்ததைக் குறிப்பிட்டுள்ளீர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் நாய் கடித்துவிட்டதாக ஒரு நபர் சிகிச்சைக்கு வந்தார். கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டு 18 நாள்களில் அவருக்கு நாய்க்கடி. அதில் அவருக்கு பலத்த காயம். வழக்கமாகப் போடும் டெட்டனஸ் ஊசியோடு ஆன்டி ரேபிஸ் ஊசியையும் அவருக்குப் போட வேண்டியிருந்தது. ரண ஜன்னியும் உயிரைப் பறிக்கலாம். கடித்தது வெறிநாயாக இருந்தால் அதுவும் உயிருக்கே ஆபத்தானது. எனவே, அவருக்கு இரண்டு ஊசிகளையும் போட்டு அனுப்பினோம்.

சாலை விபத்துகளும் இப்படித்தான். அந்த விபத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரத்த இழப்பு அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எலும்பு முறிவு ஏற்பட்டிருந்து அது சரிசெய்யப்படா விட்டால் எலும்புகள் மீண்டும் சேராது. ஆஸ்டியோமைலட்டிஸ் எனும் தொற்றுக்குக் காரணமாகலாம். எலும்பு உடைந்த முதல் மூன்று நாள்களுக்குள் அதைச் சேர்க்கச் செய்யப்படும் சிகிச்சையின் பலனுக்கும் பத்து நாள்களுக்குப் பிறகு செய்யப்படும் சிகிச்சைக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *