Share on Social Media

நான் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, எனக்கு கொரானா தொற்று வந்தது. மீண்டும் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது. இனி இரண்டாவது தவணை தடுப்பூசி எத்தனை நாள்கள் கழித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்? கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

– சுசீந்திரன்.பா (விகடன் இணையத்திலிருந்து)

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.

“தடுப்பூசி என்பது தொற்றே வராமல் உங்களை 100 சதவிகிதம் காக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. இது கோவிட் நோய்க்கெதிரான தடுப்பூசிக்கு மட்டுமல்ல, தட்டம்மை, இன்ஃப்ளுயென்ஸா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் பொதுவானது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏற்படும் தொற்றானது `பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன்’ எனப்படுகிறது. அப்படி ஏற்படும் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தாது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *