Share on Social Media

Covid question: குழந்தையின்மைக்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? தடுப்பூசி போடுவதால் கருத்தரிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

– சிவராமன் (விகடன் இணையத்திலிருந்து)

கர்ப்பிணி -representational Image

கர்ப்பிணி -representational Image

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

“நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கருத்தரிக்கும் முயற்சிகளில் இருப்போருக்கு கொரோனா தடுப்பூசிகளால் எந்தப் பிரச்னையும் வந்ததாக தற்போதுவரை தகவல்கள் இல்லை. ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகுதான் அந்தப் பெண்ணுக்கு, தான் கருத்தரித்திருப்பதே தெரிய வந்தது என்றாலும் பிரச்னையில்லை. பயந்துகொண்டு கருவைக் கலைக்கத் தேவையில்லை. நம்மிடையே இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கருச்சிதைவோ, குறைப்பிரசவமோ, குழந்தை குறைகளுடன் பிறந்ததாகவோ எந்தத் தகவலும் இல்லை.

இனிமேல்தான் கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ளப் போகிறவர்கள் என்றால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு அதன் பிறகு கருத்தரிக்கலாம்”.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *