Share on Social Media

சித்த மருத்துவர் என்பவர் சித்த மருத்துவப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றவர் அல்லது அனுபவம் வாய்ந்த பாரம்பர்ய சித்த மருத்துவராக இருப்பது அவசியம். போலி மருத்துவர்களின் தவறான ஆலோசனைகளை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பி ஏமாறுவதும் தவறு. இக்கட்டான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தெளிவாக எடுப்பது அவசியம்.

கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவுடன் காய்ச்சல் ஏற்படுகிறதெனில் மருத்துவர் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் அல்லது நிலவேம்புக் குடிநீர் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சலுக்காகப் பரிந்துரைக்கப்படும் மற்ற சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதே போல தடுப்பூசியால் ஏற்படும் உடல் சோர்வுக்கு, சித்த மருந்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம். நீரிழிவு பாதிப்புக்காகவோ, உயர்ரத்த அழுத்த நோய்க்காகவோ சித்த மருந்துகளை எடுப்பவர்களும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தொற்றா நோய்களுக்காகப் பெரும்பாலும் மூலிகை சார்ந்த மருந்துகளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நிலவேம்பு குடிநீர் பருகும் முதியவர் (மாதிரி படம்)

நிலவேம்பு குடிநீர் பருகும் முதியவர் (மாதிரி படம்)

இதயம் சார்ந்த நோய்களுக்காகவோ, ரத்த உறைதல் பிரச்னைக்காகவோ ஒருங்கிணைந்த சித்த மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரின் தெளிவான அறிவுரையோடு தடுப்பூசி செலுத்த முற்படுவது அவசியம்.

பல்வேறு சித்த மருந்துகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, தகுதியான சித்த மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சித்த மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்பது தவறான கருத்து.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *