Share on Social Media

சிலருக்கு இருமலுடன் சளியும் வெளிப்படும். இதை Productive Cough என்கிறோம். இதற்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Viral Pneumonia), அழற்சி (Inflammation), பிற பாதிப்புகள் (Pulmonary Fibrosis) போன்றவை காரணங்களாக இருக்கலாம். எனவே இவர்களுக்கு நெஞ்சுப்பகுதிக்கான எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள், சளி, ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

நுரையீரல் பாதிப்பின் தன்மைக்கேற்ப சளியை இலகுவாக்கி வெளியேற்றும் மருந்துகள், அழற்சியைக் குறைக்கும் மருந்துகள், நுரையீரல் பாதிப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தவிர இவர்களுக்கு மூச்சுப் பயிற்சியும் ஆவி பிடித்தலும் உதவும். நெஞ்சு சளியை வெளியேற்றவும் பயிற்சிகள் (Chest physiotherapy) தேவைப்படும்.

Steam Inhalation

Steam Inhalation
Photo: IStock

ஏற்கெனவே அமிலப் பின்னோட்ட நோய் (GERD), காசநோய் (TB), ஆஸ்துமா, ஒவ்வாமை (Allergic Rhinitis), நீண்டகால சுவாச பாதிப்பு (COPD) போன்றவை இருந்தால் அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக புகைப்பழக்கம் இருந்தால் நிறுத்தப்பட வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமெனில் மருத்துவரிடம் ஆலோசித்து, ரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளும் குறிப்பிட்ட சில மருந்துகளை (Angiotensin-Converting Enzyme (ACE) inhibitors) நிறுத்திவிட்டு வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *