Share on Social Media


கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டுமா? அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்ட அறையை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எதையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும்?

– கௌதம் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

“கோவிட் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவற்றை நிச்சயம் முறையாகச் சுத்தம் செய்துதான் மறுபடி பயன்படுத்த வேண்டும்.

குணமானவர்கள் பயன்படுத்திய துணிகள் உட்பட அனைத்தையும் மற்றவர்களின் துணிகள், தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்றவற்றுடன் கலக்காமல் தனியே துவைக்க வேண்டும். வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் டிடெர்ஜென்ட் கொண்டே துவைக்கலாம். துவைத்தவற்றை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து மீண்டும் பயன்படுத்தலாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *