Share on Social Media

Covid Questions: கொரோனாவுக்கு முன் மனவலிமை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் உடலில் சிறு தொந்தரவு வந்தால்கூட அதை கொரோனாவின் அறிகுறியாகக் கருதி மன உளைச்சல் அதிகமாகிறது. இதிலிருந்து எப்படி மீள்வது?

– அஜித்குமார் (விகடன் இணையத்திலிருந்து)

உளவியல் ஆலோசகர். சித்ரா அர்விந்த்.

உளவியல் ஆலோசகர். சித்ரா அர்விந்த்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அர்விந்த்.

“இந்த உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல, நிறைய பேருக்கு இப்போது இருக்கிறது. ஏதோ ஓர் ஆபத்து வரப்போகிறது என்றால் நம் உடலில் ஓர் அலாரம் அடித்து அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலானவர் களுக்குள் அடிப்பது தவறான அலாரம். அது நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டு நம்மை தேவையற்ற குழப்பங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஆட்படுத்திக்கொண்டேதான் இருக்கும். இப்போதைய சூழலில் பலரும் எதிர்கொள்கிற உணர்வு இது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

உண்மையான அலர்ட்டுக்கும் இதுபோன்ற தவறான அலர்ட்டுக்கும் வித்தியாசம் உண்டு. இது தவறான அலர்ட் என்பதை நம்புங்கள். இப்போதைய சூழலில் இத்தகைய எண்ணங்கள் தேவையில்லை, இவை உண்மையுமில்லை. இந்த உணர்வு வரும்போதெல்லாம் உங்கள் எண்ணங்களைத் திசைத்திருப்பக் கற்றுக்கொள்ளுங்கள்.

`நான் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளேன்’ என்று அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மனது அதை நம்பி, தவறாக ஒலிக்கும் அலாரத்தை ஆஃப் செய்யும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *