Share on Social Media

முறையாக ஒரு மாஸ்க் அணிய வேண்டியது மிக மிக முக்கியம். முடிந்தவர்கள் இரண்டு மாஸ்க் அணியலாம். N 95 மாஸ்க் அவசியமில்லை. இரண்டு அல்லது மூன்றடுக்கு துணி மாஸ்க்கே போதுமானது.

அமெரிக்காவில் அதிகபட்சமாகத் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளில், வெளியிடங்களில் மட்டும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மூடப்பட்ட இடங்களைவிட, திறந்தவெளிகளில் தொற்றுப்பரவல் குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அதனால் அவர்களும் திறந்தவெளிகளில் மாஸ்க் அவசியம் என்று வற்புறுத்துவதில்லை. அந்த நிலையிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்கிறார்கள். அங்கேயும் வீட்டுக்குள் இருக்கும்போதும், மூடிய இடங்களுக்குள் இருக்கும்போதும், பணியிடங்களிலும், கடைகளிலும் மாஸ்க் அணிய வேண்டும் என்றே சொல்கிறார்கள். இது எதுவும் நமக்குப் பொருந்தாது. நாம் இன்னும் சில வருடங்களுக்கு எல்லா இடங்களிலும் மாஸ்க் அணிந்தே ஆக வேண்டும்.

Mask

Mask
AP Illustration/Peter Hamlin

இரு நபர்களுக்கு இடையில் இடைவெளி குறைவாக இருக்கும் இடங்களில் காற்று மூலம் இந்தத் தொற்று பரவுவது உறுதியாகியிருக்கிறது. அதனால்தான் மாஸ்க் அணிவதையும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறோம். இந்த வைரஸ் போய், இன்னொன்று வந்தாலும் இதுதான் விதி.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *