Share on Social Media

ஏற்கெனவே ஒரு வைரஸ் (Coxsackievirus) தொற்றால் கணைய பீட்டா செல்கள் அழிந்து முதல்வகை நீரிழிவு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸுக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்கள், பீட்டா செல்களை அழித்துவிடுகின்றன. எனவே, கோவிட் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமாகி பல வாரங்கள் ஆனபோதும், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்தாத போதும் ஏற்கெனவே நீரிழிவு இல்லாதவராக இருந்து இப்போது ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தால் அவருக்கு கோவிட் 19 தொற்றால் நீரிழிவு வந்ததா என கண்காணித்து தீர்மானிக்க வேண்டும்.

HbA1c எனும் ரத்தப் பரிசோதனையில் கடந்த 3 மாதங்களில் ரத்தச் சர்க்கரையின் அளவு எப்படியிருந்தது என்பதைக் கண்டுபிடிக்கலாம். அது நார்மலாக இருந்து, கோவிட் தொற்றுக்குப் பிறகு, அதிகரித்திருந்தால் கோவிட் தொற்றால் அது அதிகரித்திருக்கலாம் என சந்தேகிக்கலாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

கொரோனா தொற்றுக்கு முன்பும் HbA1c அளவானது அதிகமிருந்து, தொற்றுக்குப் பிறகும் அது அதிகமாகவே இருந்தால், அவர்கள் ஏற்கெனவே நீரிழிவுநோய் பாதிப்புக்குள்ளாகும் `ப்ரீ டயாபடிக்’ நிலையில் இருந்திருக்கலாம் அல்லது அதுவரை நீரிழிவு இருந்ததே தெரியாதவர்களாகவும் இருக்கலாம்.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *