Share on Social Media

கொரோனா பாதிப்பால் இடதுகை சுண்டுவிரல் மற்றும் இடது தொடை மரத்துவிட்டது. நரம்பியல் மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, இடது பக்கம் முழுவதுமாக. பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, மாத்திரைகள் பரிந்துரைத்தார். நான். பழையபடி எப்போது நார்மல் நிலைக்கு வருவேன்?

– அருண் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

“ கொரோனா தொற்று பாதித்து குணமடைந்த பலருக்கும் அதைத் தொடர்ந்து இதுபோன்ற பல பாதிப்புகள் தொடர்வதைப் பார்க்கிறோம். முதல் அலையைவிடவும் இரண்டாவது அலையில் `லாங் கோவிட்’ எனப்படும் இந்தப் பாதிப்பின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. சிலருக்கு நரம்பு மண்டலம், சிலருக்கு கணையம், சிலருக்கு எலும்புகள் என ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான பாதிப்பைக் காட்டுகிறது கொரோனா. உங்கள் விஷயத்தில் நீங்கள் நரம்பியல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொண்டு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மருத்துவர் ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதை நிச்சயம் பரிசோதித்திருப்பார். Peripheral Pulse பார்த்துவிட்டே மருத்துவர் இதை உறுதிசெய்துவிடுவார்.

அதாவது, நோயாளியின் நாடியைப் பார்த்தே கண்டுபிடித்துவிடுவார். தன் கையைப் போலவே நோயாளியின் கையும் கதகதப்பாக இருக்கிறதா என டெஸ்ட் செய்வார். இந்த இரண்டும் நார்மல் என்றால் நோயாளிக்கு தொடுதல் உணர்வு இருக்கிறதா என்று பார்ப்பார். முதல்கட்டமாக ரத்தக்குழாய்களை விரிவுபடுத்தும் மருந்துகள், சத்து மாத்திரைகளைக் கொடுத்துப் பார்ப்பார்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *