Share on Social Media


Covid Questions: எனக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு கோவிட் பாதித்தது. அதிலிருந்து குணமடைந்துவிட்டாலும் தற்போது அடிக்கடி சளி பிடிக்கிறது. இதற்கு தீர்வு கூறுங்கள்?

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி

“நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புக்குள்ளாகி மீண்டிருக்கிறீர்கள். எனவே இயல்பிலேயே உங்கள் உடலில் ஆன்டிபாடிக்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த இயற்கையான ஆன்டிபாடிக்கள் 6 முதல் 9 மாதங்கள் வரை கோவிட் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றலை உங்களுக்குத் தரும்.

இப்போது உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் சளி பாதிப்புக்கும் கோவிட் தொற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. நம்முடைய சீதோஷ்ணநிலை மாறியிருக்கிறது. மழையும் குளிரும் சேர்ந்திருக்கிறது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற சீதோஷ்ணநிலை மாற்றங்களால் சளி, இருமல் வர வாய்ப்புகள் அதிகம். அது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாகவோ, ஜலதோஷமாகவோ இருக்கக்கூடும்.

AP21174651476648 Tamil News Spot
Covid Questions

Also Read: Covid Questions: டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் கண்ணாடி டம்ளர்களால் கொரோனா பரவுமா?

ஆனால் அந்த அறிகுறிகளோடு உடல்வலி, சோர்வு, மூச்சுத்திணறல், வறட்டு இருமல், தலைவலி போன்றவையும் சேர்ந்துகொண்டு தீவிரமானால் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் பட்சத்தில் அது மீண்டும் தாக்குமா என பயப்பட வேண்டாம். அதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது.”

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *