Share on Social Media

Covid question: கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் இருக்கும்? அந்தப் பாதிப்புகள் எத்தனை நாள்களுக்கு இருக்கும்? மீண்டவர்கள் என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்? தொற்றிலிருந்து குணமான பிறகு எப்போது டெஸ்ட் எடுக்க வேண்டும்? இல்லறத்தில் ஈடுபடலாமா… எத்தனை நாள்கள் கழித்து?

– சந்திர குமார் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் அருணாசலம்

மருத்துவர் அருணாசலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

“இரண்டாம் அலையில் மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களை ஆக்சிஜன் சப்போர்ட்டுடன்கூட வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். அவரது தொற்றின் தீவிரத்தை ரத்தப் பரிசோதனையில் கண்டறிந்து ஒருவேளை அவருக்கு ஆக்சிஜன்அளவானது 88-89 என்ற அளவில் இருந்தால்கூட ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் உதவியோடு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். ஒரு மாதம்வரை அவர்களுக்கு ஆக்சிஜன் சப்போர்ட் தேவை என்று அறிவுறுத்தியே அனுப்புகிறோம். ஆனால், ஒன்றிரண்டு வாரங்களிலேயே அவர்கள் ஆக்சிஜன் சப்போர்ட்டிலிருந்து மீண்டு வருவதையும் பார்க்கிறோம். மிதமான பாதிப்புள்ளவர்கள் பெரும்பாலும் மருத்துவமனையில் அட்மிட் ஆவதில்லை.

அவர்களுக்கு அவ்வப்போது காய்ச்சல் வந்து போகலாம். வீட்டுத்தனிமையில் இருந்தபடி, மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றினாலே குணமாகிவிடுகிறார்கள். பசியின்றி இருந்தவர்களுக்கு தொற்றிலிருந்து குணமானதும் மீண்டும் பசி உணர்வு திரும்புவதையும், விருப்பமான ஹோட்டல்களில் ஆர்டர் செய்து தரும்படி கேட்கும் அளவுக்கு நாவின் சுவை உணர்வு இயல்புநிலைக்குத் திரும்புவதையும் பார்க்கிறோம். கோவிட் பாதிப்பால் எடை குறைந்தவர்கள், குணமான பிறகு மீண்டும் பழைய எடைக்குத் திரும்புகிறார்கள். மிதமான பாதிப்பு உள்ளவர்களும் முழுமையாகக் குணமாக பத்து முதல் பதினைந்து நாள்கள் ஆகலாம். அதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நன்றாகச் சாப்பிட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்துகிறோம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *