Share on Social Media

எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் அளவு குறைந்து, மருத்துவ சிகிச்சை எடுத்து, தற்போது நார்மலாக உள்ளேன். இப்போது எனக்கு ஆக்ஸிஜன் அளவு 98 மற்றும் பல்ஸ் ரேட் 94 என்று இருக்கிறது. தினமும் 2 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்கிறேன். ரத்தச் சர்க்கரை அளவு ஃபாஸ்டிங்கில் 174, சாப்பாட்டுக்குப் பின் 206 இருக்கிறது. ரத்த அழுத்தம் 122/80. Insulin novorapid, lantus 40, Telma H 40 , cilacar 20, Aztor 10 mg, clopilet 75 mg ஆகிய மாத்திரைகளை எடுத்துவருகிறேன். நான் 22.6.2021 முதல் 6.7.2021 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
நான் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

– தினேஷ் மணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

“நீங்கள் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. கூடவே கட்டுப்பாடில்லாத நீரிழிவும் இருக்கிறது. இந்நிலையில் முதலில் நீங்கள் ரத்த அழுத்தத்தையும் ரத்தச் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல வேண்டும். கோவிட் தொற்று குணமானதில் இருந்து 45 நாள்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால், அதற்குள் சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்துக் கட்டுக்குள் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். ஊசி போட்டுக்கொள்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன் நீரிழிவு மருத்துவர் மற்றும் இதயநோய் மருத்துவரை அணுகி ஓர் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *