Share on Social Media

Covid question : கோவிட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு எத்தனை நாள்கள் கழித்து கேட்டராக்ட் (கண்புரை) அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம்?

– விஜயலக்ஷ்மி (விகடன் இணையத்திலிருந்து)

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

“ஒருவர் நீரிழிவுக்காரராக இருந்தால் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது. மற்றபடி கேட்டராக்ட் செய்துகொள்வதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கேட்டராக்ட் அறுவைசிகிச்சை செய்கிற நபர்களுக்கு, அறுவைசிகிச்சை முடிந்த ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே அறிவுறுத்துகிறேன். கோவிஷீல்டு, கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் என எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதைப் போட்டுக்கொள்ளலாம். அந்த விஷயத்தில் ரொம்பவும் யோசிக்க வேண்டாம். இப்போதைக்கு கொரோனாவிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *