Share on Social Media


குளிர்கால வானிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் எப்படியிருக்கும்?

– யாழினி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

“பொதுவாகவே குளிர்காலத்தில் ஜலதோஷம் (Common Cold) மற்றும் ஃப்ளூ காய்ச்சலின் (Influenza) தீவிரம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதைப் போலவே குளிர்காலத்தில் கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கோவிட் வைரஸானது சூரிய வெளிச்சமும் வெப்பமும் குறைவாக உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருக்கும். தவிர குளிர்காலத்தில் மக்கள் கூடும் உள்ளரங்கங்களில் நீண்ட நேரம் இருக்கும். அங்கே காற்று குளிராகவும் உலர்ந்தும் இருக்கும். இந்தக் காரணங்களால் கோவிட் பரவலும் நோய்த்தொற்றும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஒருவர் இருமுகிறபோது, தும்முகிறபோது, பேசும்போது, பாடும்போது, மூச்சுவிடும்போதுகூட நீர்த்திவலைகள் வெளிப்பட்டு வைரஸ் பரவலாம் அல்லது சிறுதுகள்களாக காற்றில் மிதந்தும் பரவலாம். இந்த சிறுதுகள்கள் குளிர்காலத்தில் காற்றில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *