Share on Social Media

நான் 2015-ம் ஆண்டு Guillain Barre Syndrome (GBS) நோயால் பாதிக்கப்பட்டேன். அப்போது கைகால்கள் முழுவதும் செயல் இழந்தன. தற்போது நலமாக இருக்கிறேன். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

– சுப்பிரமணி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இந்தப் பாதிப்பை பற்றி விளக்கிவிடுகிறேன். குலியன் பாரி சிண்ட்ரோம் என்பது நரம்புகளைப் பாதிக்கிற ஒரு பிரச்னை. அது பாக்டீரியா அல்லது வைரஸ் என ஏதோ ஒரு தொற்றின் பின்விளைவாக இருக்கலாம் அல்லது எந்தக் காரணமும் இல்லாமலும் வரலாம்.

இதுவரை இதுதான் குலியன் பாரி சிண்ட்ரோமை ஏற்படுத்துகிறது என எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை. இந்தப் பாதிப்பு வரும்போது நம் உடலிலுள்ள நரம்புகளை எதிர்த்து உடலானது எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அப்போது நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதனால் மூளை மற்றும் முதுகுத்தண்டை உள்ளடக்கிய மத்திய நரம்பு மண்டலமும், உடலின் பிற நரம்புகளை உள்ளடக்கிய பெரிஃபரல் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றன.

தொடுதல் உள்ளிட்ட அத்தனை உணர்வுகளும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவை என்பதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், குத்துவது போன்ற உணர்வு, கூச்சம், மரத்துப்போவது, கைகால்களைத் தூக்க முடியாமல்போவது போன்றவை வரலாம். முதலில் உடலின் ஒரு பக்கத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் பல தசைகளையும் பாதிக்கும் அளவுக்கு இந்த நோய் தீவிரமாகக்கூடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *