Share on Social Media

நான் கடந்த ஐந்து மாதங்களாக டிபி நோய்க்கு மாத்திரை எடுத்து வருகிறேன். இன்னும் 4 மாதங்களுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

– காயத்ரி (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

“பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை காசநோய்க்குச் சிகிச்சை கொடுப்பார்கள். இரண்டு, மூன்று மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பார்கள். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். நீங்கள் தாராளமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

காசநோய்க்கான சிகிச்சையில் மட்டுமல்ல, இதயநோய், நீரிழிவு என எந்த நோய்க்கான சிகிச்சையில் இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பிரச்னைகள் எவையும் அதற்குத் தடையில்லை.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *