Share on Social Media

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் பிறக்கும் குழந்தை எதிர்ப்புசக்தியுடன் இருக்குமா?

– பழனிவேல் (விகடன் இணையத்திலிருந்து)

கர்ப்பிணி

கர்ப்பிணி

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

“கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என இந்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. இந்திய மகப்பேறு மருத்துவக் கழகம், கர்ப்பிணிகள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம், அது பாதுகாப்பானது என்று சொன்ன பிறகும் அரசுத் தரப்பில் இன்னும் அதற்கு சம்மதம் வரவில்லை. கர்ப்ப காலத்தில் தாய் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்குமா என்பதற்கான புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை.

கர்ப்பகாலத்தில் தொற்று ஏற்பட்டதை வைத்துதான் இதைக் கண்டுபிடித்தார்கள். கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது நஞ்சு மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு ஆன்டிபாடி போவது மட்டுமன்றி, தாய்ப்பாலின் வழியேவும் அது சிறிதளவு குழந்தைக்குப் போனது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்துதான் mRna தடுப்பூசிகள் கர்ப்பகாலத்தில் பாதுகாப்பானவை என்று சொன்னார்கள். அமெரிக்காவில் மாடர்னா மற்றும் ஃபைஸர் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் போடப்பட்டிருக்கின்றன.

கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடலாம் என்றால் எப்போது போடலாம் என்ற கேள்வி எழும். டிடி, ஃப்ளூ தடுப்பூசிகளைப் பொதுவாக இரண்டாவது ட்ரைமெஸ்டர் எனப்படும் கர்ப்பத்தின் 6-7வது மாதங்களில் போடுவார்கள். கோவிட் தடுப்பூசியையும் அதே காலத்தில் போடுவதன் மூலம் பிரசவத்துக்குள் அந்தப் பெண்ணுக்கு ஆன்டிபாடி உருவாகிவிடும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *