Share on Social Media

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் அடுத்த டோஸுக்கான இடைவெளி முடிவதற்கு முன்னரே போட்டுக்கொள்ள அரசு அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை நாள்கள் இடைவெளிவரை அரசு அனுமதிக்கிறது? அந்த மாணவர்கள் எங்கே இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்? ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை எனப் பல இடங்களிலும் இரண்டாவது டோஸுக்கான இடைவெளி முடிவதற்குள் போட மாட்டோம் எனத் திருப்பி அனுப்புகிறார்களே… இந்நிலையில் அந்த மாணவர்கள் என்ன மாதிரியான ஆவணங்களைக் காட்டி, முன்கூட்டியே இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்?

– ஜகதீஷ் (விகடன் இணையத்திலிருந்து)

டாக்டர் குமாரசாமி

டாக்டர் குமாரசாமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.

“ கோவிஷீல்டு தடுப்பூசியைப் பொறுத்தவரை முதல் டோஸ் போட்டுக்கொண்டதிலிருந்து 12 முதல் 16 வாரங்களில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம். கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 4 முதல் 6 வாரங்களில் போட்டுக்கொள்ளலாம். இந்தியாவைப் பொறுத்தவரை இதுதான் நேஷனல் கைடுலைன்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *