Share on Social Media

பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் அங்கே 3-வது அலை வருமா என்பது தெரிந்துவிடும். அந்த ஒரு மாதத்துக்குள் தடுப்பூசிகளை அதிகப்படுத்துவதன் மூலமும், இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொடுப்பதன் மூலமும் 3-வது அலையைத் தடுக்க முடியுமா என்பதுதான் இப்போது அவர்களின் கேள்வி. அதன் காரணமாக முதலில் ஃபைஸர் அல்லது மாடர்னா இரண்டில் ஏதேனும் ஒன்றை பூஸ்டர் டோஸாகக் கொடுக்கலாமா என்று யோசித்தார்கள்.

பூஸ்டர் டோஸ் கொடுப்பதன் காரணமே தடுப்பூசியின் செயல்திறனை நீட்டிக்கச் செய்வதுதான். தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் வருகிறதா இல்லையா என்பது சாமானியர்களுக்கான விஷயம். மருத்துவர்களைப் பொறுத்தவரை அதை ‘டைட்டர்ஸ்’ என்று சொல்வார்கள். அதாவது தடுப்பூசியின் செயல்திறன் மேலே போய், பிறகு குறைய ஆரம்பிக்கும். ஆக மேலே செல்லும் தடுப்பூசியின் செயல்திறனை மேலும் அதிகரிப்பதற்காகவே பூஸ்டர் கொடுக்கப்படும்.

 Vaccine

Vaccine
AP Photo / Mahesh Kumar A

இந்நிலையில், வேறொரு தடுப்பூசியின் பூஸ்டரை கொடுக்கும்போது அதே செயல்திறன் இருக்குமா என்று தெரியாது. வெளிநாடுகளில் ட்ரையல் அடிப்படையில் இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் உயிர்ச்சேதமில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது ஆபத்துகள் இல்லை, அதே நேரம் அதன் பலன்கள் பற்றியும் எதுவும் சொல்வதற்கில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதிகரித்திருக்கும் ஆன்டிபாடி, பூஸ்டரால் உருவானதா அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியால் வந்ததா என்றெல்லாம் தெரியாது. எனவே, ஆய்வுகளின் முடிவுகள் வரும்வரை வாக்சின் காக்டெயில் சரியானதா, இல்லையா என்பதைச் சொல்ல முடியாது.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *