Share on Social Media

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

– பரணி கௌஷிக் (விகடன் இணையத்திலிருந்து)

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைக்கான சிறப்பு மருத்துவர் ஶ்ரீதரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.

“உலக அளவில் ஆஸ்துமா, அலர்ஜி என்பது பரவலாகக் காணப்படுகிற ஒரு நோய். அதாவது 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அந்த 18 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடாமலிருக்க முடியுமா? இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத்தான் அவசியம் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். ஏனென்றால் ஆஸ்துமா, நீரிழிவு, சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று பாதித்தால் அதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை அந்த நோய்க்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல், கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது. ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போதும் ஆஸ்துமாவுக்கான மருந்துகளை நிறுத்த வேண்டாம்.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *