Share on Social Media

சாதாரணமாக ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தானது புரதத்துடன் இணைந்தே இருக்கும். ஆனால், கோவிட் தொற்று ஏற்படும்போது உண்டாகும் வீக்கம் காரணமாக அந்த இரும்புச்சத்தானது தனியே இருக்கும். கறுப்புப் பூஞ்சை வளர்வதற்கு அந்த இரும்புச்சத்தும் குளுக்கோஸும் தேவை என்பதால் இந்தச் சூழலில் அது பல்கிப் பெருகும்.

Steam Inhalation

Steam Inhalation
Photo: IStock

எனவே, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்தச் சர்க்கரையின் அளவானது சாப்பிடுவதற்கு முன் 110, சாப்பிட்ட பிறகு அதிகபட்சம் 200 என்ற அளவைத் தாண்டக் கூடாது. கோவிட் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு கொடுக்கும்போது இன்சுலினும் கொடுக்க வேண்டியிருக்கும். மிக மிக அவசியம் என்றால் மட்டும்தான் ஸ்டீராய்டு கொடுக்க வேண்டும். அப்படி ஸ்டீராய்டு கொடுக்கும்போது ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.

கோவிட் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பும்போது கறுப்புப் பூஞ்சைத் தொற்றுக்கான அறிகுறிகளைச் சொல்லி எச்சரித்துதான் அனுப்புவோம். மூக்கில் வறட்சி, மரத்துப்போவது, கண்கள் சிவந்துபோவது, கண்களைச் சுற்றியுள்ள தசைகள் பாதிப்பதன் விளைவாகக் காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரிவது, கண்களில் வீக்கம் போன்றவை இருந்தால் உடனே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் அலட்சியமாக விட்டாலும் பார்வை பறிபோகலாம். இந்தத் தொற்றின் முதல் அறிகுறி மூக்கிலிருந்து ஆரம்பிப்பதால் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை அவசியமாகிறது.”

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *