Share on Social Media


சென்னை: தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரசுக்கு கைகொடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.

மாநிலம் முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிக படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மேம்படுத்துவதில் மாநில அரசுக்கு உதவும் நோக்கில் இந்த நிறுவனங்கள் முன்முயற்சிகளை மேற்கொள்ளன.

இந்த தன்னார்வ முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (Megha Engineering and Infrastructures Ltd), ஏற்கனவே ஆக்ஸிஜன் வசதி உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை அமைத்து வருகிறது.

Also Read | ஆன்லைன் வகுப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவுகள்!

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் 500 அளவிடக்கூடிய ஆக்ஸிஜனேற்ற படுக்கை வசதிகளை தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கடந்த வாரம் திறந்து வைத்தார். Credai மற்றும் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் (G Square Realtors)  பங்களிப்புடன் 500 படுக்கைகள் கொண்ட வசதியை மிக விரைவில் தங்களால் அமைக்க முடியும் என்று  மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (Megha Engineering and Infrastructures Ltd) நிறுவனம் கூறுகிறது. 72 மணி நேரத்தில் 500 படுக்கைகளை அமைப்பதற்கான முழு வேலைகளையும் தங்களால் செய்துவிட முடியும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

“தொற்றுநோய் காட்டுத்தீ போல் பரவும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியது. இந்த சிக்கலான நேரத்தில் MEIL (Megha Engineering and Infrastructures Ltd) மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்கிறோம். தேசத்திற்கு சேவை செய்வதில் இது எங்கள் முன்னுரிமை என்று நாங்கள் உணர்கிறோம்” என்று MEIL இயக்குனர் பி. சீனிவாச ரெட்டி கூறினார்.

விரைவில் 200 பிஎஸ்ஏ (Pressure Swing Adsorption) ஆலைகளை நிறுவுவதாகவும், கிரையோஜெனிக் டாங்கிகள் தயாரிப்பதில் இறங்குவதாகவும் MEIL இயக்குனர் கூறினார். இந்த விஷயத்தில் டிஆர்டிஓ (DRDO) மற்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural gas) தங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும்  பி. சீனிவாச ரெட்டி கூறினார். 

Also Read | தமிழ் பஞ்சாங்கம் 28 மே, 2021: வைகாசி 14ஆம் நாள்; வெள்ளிக்கிழமை

தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் உள்ள இரு மருத்துவமனைகளுக்கும் தங்கள் நிறுவனம் மருத்துவ ஆக்ஸிஜனை இலவசமாக வழங்கி வருவதாகவும், தெலுங்கானா அரசுக்கு 11 கிரையோஜெனிக் தொட்டிகளை (Cryogenic tanks) இறக்குமதி செய்து நன்கொடையாக அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவிட் -19 வழக்குகளைச் சமாளிக்க தமிழக அரசு மூன்று முனை மூலோபாயத்தைப் பின்பற்றி வருகிறது. லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். மிதமான பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் -19 பராமரிப்பு மையங்களுக்கு (கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும் பராமரிப்பு மையங்கள். கண்காட்சி அரங்குகள், பல கட்டடங்கள் படுக்கை வசதியுடன் கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன) அனுப்பப்படுகின்றனர். தீவிர கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 
தற்போது, தமிழகத்தின் அன்றாடம் சுமார் 35,000 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுகிறது. 

Also Read | 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *