Share on Social Media


அடுத்தது தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாத டெல்டா வேரியன்ட் வைரஸ். மூன்றாவதாக அங்குள்ள குடிசைவாழ் மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தொடரும் தயக்கம். சமீபத்திய தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு இவையெல்லாம் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், நியூசிலாந்தின் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இதுவரை வெற்றி பெற்றிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று எண்ணிக்கை 206 என்று காட்டினாலும், இறப்பு எண்ணிக்கையும் தொற்றுப் பரவும் விகிதமும் குறைவாகவே இருக்கின்றன.தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

Covid -19 Pandemic

Covid -19 Pandemic
Pixabay

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்போரும் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். தளர்வுகளை அறிவித்ததன் விளைவாகக் குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதுதான் அவர்கள் சந்திக்கும் தற்போதைய பெரிய சவால்.

எனவே, கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் நியூசிலாந்து தோற்றுவிட்டது என்று சொல்வது சரியானதல்ல. இதுவரையிலான நியூசிலாந்தின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இது அவர்களுக்குத் தற்காலிகப் பின்னடைவுதான். கோவிட் தொற்றுக்கு எதிரான அவர்களுடைய கடந்தகால அணுகுமுறை பெருமளவில் வெற்றிபெற்றிருப்பதால் தற்போதைய நிலையிலிருந்தும் நியூசிலாந்து நிச்சயம் மீண்டுவரும் என்று நம்பலாம்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *