Share on Social Media

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

சிலருக்கு இருமல் அடுக்குதொடர் போன்று தொடர்ந்து இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் இருமலை அதிகமாக எதிர்கொள்வார்கள். இவர்கள் பாதிப்பில்லாமல் இருமல் நீங்க துளசி கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுக்கவும். பிறகு இதில் பனங்கற்கண்டு சேர்த்துகாய்ச்சி குடிக்க வேண்டும்.

பிரசவத்துக்கு பிறகு கருப்பையில் இருக்கும் அழுக்கு வெளியேற செய்ய வேண்டிய வைத்தியம் இதுதான்!

துளசிசாறுடன் முருங்கைக்கீரை சாறு, கல் உப்பு, சிட்டிகை சுண்ணாம்பு கலந்து நன்றாக குழைத்து தொண்டை பகுதியில் பற்று போட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை செய்து வந்தால் இருமல் படிப்படியாக குணமாக கூடும்.

தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

அரிசித்திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி இலுப்பை சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும். ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனில் திப்பிலி பொடியை குழைத்து வைக்கவும். கருப்பு வெற்றிலை ஒன்றை எடுத்து காம்பு நீக்கி மடித்து இந்த கலவையை நடுவில் வைத்து வெற்றிலையோடு சேர்த்து மெல்லவும்.

நன்றாக மென்று சாறை பொறுமையாக விழுங்கி விடவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிடலாம். இதன் சாறு உள்ளே இறங்க இறங்க இருமல் படிப்படியாக குறையக்கூடும்.

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை, துளசி இவற்றின் இலைகள் தலா அரைகைப்பிடி எடுத்து சுத்தம் செய்து சாறு எடுக்கவும். பிறகு சித்தரத்தை, இஞ்சி துண்டு இரண்டையும் சிறுதுண்டு அளவு எடுத்து அதையும் இடித்து சாறு எடுக்கவும். இலைச்சாறு மற்றும் இஞ்சி சித்தரத்தை சாறு இரண்டையும் கலந்து 10 முதல் 20 சொட்டு வரை வயதுக்கேற்ப எடுத்து வைக்கவும்.

இதை வெண்ணெயில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். கபம் சார்ந்த இருமலுக்கு நல்ல மருந்து இது. குழந்தைகளுக்கு உண்டாகும் கணைச்சூடு குணமாகும்

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

இருமல் தொடர்ந்து இருந்தால் குறிப்பாக வறட்டு இருமலாக இருந்தால் உப்பும் மிளகும் பொடித்து வாயில் போட வேண்டும். பிறகு நன்றாக காய்ச்சிய பசும்பால் ஒரு டம்ளரை குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை இதை செய்து வந்தால் படிப்படியாக இருமல் நிற்கும்.

உப்பு, மிளகு சேர்த்து காரச்சுவையும், உவர்ப்பு சுவையும் இருப்பதால் அதை தவிர்க்க நினைப்பவர்கள் கடுகை சிறிது நீரில் ஊறவைத்து மைய அரைத்து கால் டீஸ்பூன் அளவு எடுத்து அரை டீஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் பலன் தெரியும்.

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

ஜலதோஷம், கபத்தால் வந்த இருமலுக்கும் தொண்டைப்புண்ணுக்கும் பார்லி அரிசி ஊறவைத்த நீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை அப்படியே வைத்திருந்தால் அவை தெளிந்து மேலாக வரக்கூடும். பிறகு அதை தனியாக வெளியேற்றி அதி தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் கட்டுக்குள் வரும். தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் ஆறக்கூடும். இருமலும் கட்டுப்படும்.

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

குழந்தைகளுக்கு இருமல் தொடர்ந்து இருக்கும் போது இரவு நேரத்தில் தூங்க மாட்டார்கள். அவர்கள் இரவு தூங்கும் போது பேரீச்சம்பழம் எடுத்து நீள்வாக்கில் நறுக்குங்கள்.

உள்ளிருக்கும் விதையை எடுத்து கருமிளகு 2 அடைத்து 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அடுப்பை மிதமாக வைத்து அதில் பேரீச்சம்பழம் சேர்த்து சுண்ட காய்ச்சவும். சிறிது குங்குமப்பூ சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் வேகமாக மட்டுப்படும்.

​தொடர் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

samayam tamil Tamil News Spot

இருமலை போக்கும் கஷாயம்

வால்மிளகு – 10

அதிமதுர – சிறு துண்டு

சித்தரத்தை – சிறு துண்டு

துளசி இலை கைப்பிடி

அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இவை நன்றாக வெந்ததும் இலேசாக மத்தில் கடைந்து வடிகட்டி அதில்பனங்கற்கண்டு கலந்து விடவும். தினமும் இதை மூன்று வேளை குடித்து வந்தால் இருமல் படிப்படியாக கட்டுப்படும்.

கீழே உட்கார்ந்து சாப்பிட்டா ஆயுள் அதிகரிக்குமாம், வேறு நன்மைகளும் தெரிஞ்சுக்கங்க!

பெரியவர்கள் இருமலை கொண்டிருந்தால் சுக்கு சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு கொள்ளவும். வாயில் வைத்து உமிழ்நீரோடு கலந்து வைத்துகொண்டால் இருமல் படிப்படியாக அடங்கும்.

குறிப்பு

இருமல் எவ்விதமான தொற்றும் இல்லாமல் வேறு அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் போது இந்த குறிப்புகள் நிச்சயம் உதவும். கக்குவான் இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல், கப இருமல் போன்றவற்றை கட்டுப்படுத்த இவை உதவும். இதை பயன்படுத்திய 2 நாட்களில் இருமல் தீவிரமானால் மருத்துவரை அணுகுவது நல்லது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *