Share on Social Media


அழகுப் போட்டிகள் என்றாலே அனைவரும் ஆர்வமாகிவிடுவார்கள். விலங்குகளுக்கான அழகுப்போட்டி என்றால் அது இன்னும் சுவராசியமானதாக இருக்கும். விலங்குகளுக்கு அழகுப்போட்டியா என்ற வியப்பால் பலரும் அதை ரசித்து பார்க்கின்றனர்.

சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் ஒட்டகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட பிரபலமான கிங் அப்துல்அஜிஸ் (King Abdulaziz Camel Festival) ஒட்டக திருவிழா உலக அளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. ஏனென்றால், ஒட்டகங்களை வளர்ப்பவர்களுக்கு மொத்தம் 66 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 

போட்டியின் விதிகளின்படி, போடோக்ஸ் ஊசி (Botox injections), முகத்தை உயர்த்துதல் மற்றும் பிற அழகுசாதன மாற்றங்கள் அனுமதிக்கப்படாது. இருப்பினும், பல வளர்ப்பாளர்கள் தங்கள் ஒட்டகங்களை வெற்றிபெற வைக்க சிலிகான் மற்றும் ஃபில்லர்களை உட்செலுத்துவது போன்ற நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு மாத காலம் தொடரும் இந்த விழாவில், செயற்கையாக மேம்படுத்தப்பட்ட ஒட்டகங்களின் மீதான தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், “சிறப்பு மற்றும் மேம்பட்ட” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒட்டகங்களை சேதப்படுத்துவதைக் கண்டறிவதாக அல்ஜசீரா அதிகாரப்பூர்வ சவுதி செய்தி நிறுவனம் (Saudi Press Agency) புதன்கிழமையன்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, விலங்குகளை சேதப்படுத்திய (Tampered Animal) வளர்ப்பாளர்கள் தங்கள் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் ஒட்டகத் திருவிழாவின் சட்டக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மர்ஸூக் அல்-நாட்டோ தெரிவித்துள்ளதாக CNN செய்தி ஊடகம் கூறியதை அல்ஜசீரா மேற்கோள் காட்டியுள்ளது.

READ ALSO | எலியால் தைவானுக்கு வந்த சோதனை – கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

இந்த ஆண்டு, ஒட்டகத் திருவிழா தொடர்பாக சுமார் 147 முறைகேடு வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒட்டகங்கள் சேதமடைவதைக் கண்டறிய உடல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சவூதி அரேபியாவின் கலாச்சாரத்தில், ஒட்டகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 

 பாலைவன வாழ்க்கைக்கு உதவும் ஒட்டகங்களுக்கான அழகுப் போட்டி, மாபெரும் திருவிழாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இதில் ஒட்டகப் பந்தயம், விற்பனை மற்றும் பிற விழாக்களும் அடங்கும். 

வெற்றி பெற்ற ஒட்டகங்களின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் கிடைக்கும். இந்த போட்டிகளில் வெல்லும் ஒட்டகங்களின் உரிமையாளர்கள் அதிக விலைக்கு விலங்குகளை விற்கலாம். 

இந்த திருவிழா பிராந்தியத்தின் பெடோயின் பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தை (Bedouin tradition and heritage) பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல மில்லியன் டாலர் தொழில், ஒட்டக வளர்ப்பு இந்த பிராந்தியத்தில் மிகவும் பிரபலமானது.

Also Read | யானைகள் இறப்பு; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *