Share on Social Mediaஒமைக்ரான் கொரோனா திரிபான இது ஆரம்ப கால சான்றுகள் கொரோனா வைரஸை விட அதிகமாக பரவக்கூடும். என்று கூறுகின்றன. இது தடுப்பூசிகள் அல்லது கடந்த கால நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பை தவிர்க்கலாம். இந்நிலையில் பெற்றோர்களுக்கு இந்த ஒமைக்ரான் மாறுபாடு மற்றும் அதன் அறிகுறிகள் குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்துகொள்வது அவசியம்.

​ஒமைக்ரான் மாறுபாடு?

கொரோனா வைரஸ் பரவும் போது அவை திரிபு வைரஸாக உருமாறக்கூடியது. ஒரு வைரஸ் நோயாளியின் உயிரணுக்களில் நுழையும் போது அது தன்னை பிரதி எடுக்க தொடங்குகிறது என்று குழந்தை தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் குழந்தை மருத்துவ குழுவின் சிறப்பு மருத்துவ அதிகாரி கிறிஸ்டினா டீட்டர் விளக்குகிறார்.

Bacterial Vaginosis : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பில் சாம்பல் நிற திரவம் வெளியேறினால் அலட்சியம் வேண்டாம்? ஏனெனில்…

ஆர் என் ஏ நகல்களில் தவறுகள் இருக்கலாம் இது தன்னைத்தானே உருவாக்க கூடியது. இந்த புதிய பிறழ்ந்த நகல்கள் மற்றவர்களுக்கு வேகமாக பரப்பலாம்.

தி நியூயார்க் டைம்ஸ் படி ஒமைக்ரான் மாறுபாடு வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டுள்ளது. மொத்தம் 30 க்கும் அதிகமான இந்த பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தை பாதிக்கின்றன. இது ஹோஸ்ட் செல்களை ஊடுருவி தொற்றூநோயை உண்டாக்குகிறது. இந்த மாற்றங்கள் வைரஸை மேலும் பரவ செய்து தடுப்பூசி எதிர்ப்பை பாதிக்க்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

​ஒமைக்ரான் மாறுபாடு பற்றி நான் கலவைப்பட வேண்டுமா?

samayam tamil Tamil News Spot

உலகம் முழுவதும் கோவிட் 19- ஒமைக்ரான் தொற்று புதிய அலைகளை உண்டாக்கும் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்கள் உள்ள இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

தற்போது டெல்டா திரிபுக்கு மாற்றப்பட்ட போது மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதனால் இந்த SARS-CoV2 -ல் உண்டாக்கும் பிறழ்வுகள் குறித்து அதிக அக்கறை வேண்டும்.

உலகளவில் மேலும் தொற்றுநோய்களை உண்டாக்கலாம். மேலும் இது முந்தைய விகாரங்களை விட அதிக தொற்றுநோயை உண்டாக்கலாம். இதுவரை ஒமைக்ரான் திரிபு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் இளையவர்கள் மற்றும் இலேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவத்திருக்கிறார்கள்.

ஒமைக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன

samayam tamil Tamil News Spot

ஒமைக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகளில் இது பெரும்பாலும் இலேசான நோயை உண்டாக்குகிறது. மற்ற கொரோனா வைரஸ் விகாரங்களிலிருந்து சற்று வித்தியாசமான அறிகுறிகளுடன் இருப்பதாக டாக்டர் பரிக் கூறுகிறார். ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வாசனை அல்லது சுவை இழப்பு மற்றும் தொண்டையில் சில கீறல்கள் இல்லை ஆனால் வேறு அறிகுறிகள் அப்படியே உள்ளன.

தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி உடல்வலி மற்றும் வலி, இலேசான இருமல் மற்றும் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதே நேரம் நோயாளிகளில் பெரிய அளவு ஆக்ஸிஜன் வீழ்ச்சி இல்லை மேலும் அவர்கள் சிக்கல் இல்லாமல் குணமடைந்ததாக கூறுகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள பாதிப்பு நோயாளிகள் ஒமைக்ரான் இளவயதினரை பாதித்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனம் தென்னாப்பிரிகாவின் ஸ்வானே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 % என்று கூறியுள்ளது. குழந்தைகளின் குறைந்த தடுப்பூசி அல்லது முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக இருக்கலாம். இதை பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

​தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக பாதுகாக்குமா?

samayam tamil Tamil News Spot

கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு ஒமைக்ரான் மாறுபாடு பலனளிக்குமா என்பதை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் புதிய கட்டமைப்பில் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்காது என்னும் கவலை உள்ளது.

தடுப்பூசி மிதமான மற்றும் கடுமையான நோய்களுக்கு எதிராக தொடர்ந்து பாதுகககும் ஆனால் தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் கோவிட் 19 பிறழ்வுகளை இலேசாக கானலாம்.

வைரஸ் தொடர்ந்து மாறி மாற்றும் மாற்றமடைவதால் தடுப்பூசி உத்தி குறைவாக செயல்படக்கூடும். தற்போதையை தடுப்பூசிகள் கோவிட் 19 வைரஸின் ஸ்பைக் புரோட்டின் கட்டமைப்பில் நேரடியாக கவனம் செலுத்துகிறது. ஒமைக்ரான் மாறுபாட்டை போன்று வைரஸ் அமைப்பு மாற தொடங்கினால் தடுப்பூசி போடப்பட்ட மக்களை பாதுகாப்பதில் எங்கள் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்காது என்பதே கவலை.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தேவைப்பட்டால் ஒமைக்ரான் மாறுபாட்டுக்கு எதிராக சிறந்த முறையில் போராடுவதற்கு தடுப்பூசிகளை மாற்றியமைக்க முடியும் என்று நம்புவதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட பரிந்துரைக்கின்றன.

​ஒமைக்ரானிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

samayam tamil Tamil News Spot

இந்த ஒமைக்ரான் மாறுபாடு குறித்து பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம். கோவிட் 19 மற்ற செயல்பாடுகளை போன்றே தடுப்பூசி போடப்படாதவர்கள் மிதமான முதல் கடுமையான் நோய்த்தொற்றுக்கு ஆபத்தில் இருப்பார்கள்.

Tips To Get Conceive Fast : கருத்தரிக்க லேட் ஆகுதா? இந்த 10 குறிப்புகள் உங்களுக்கு உதவும்!

தகுதி இருந்தால் தடுப்பூசி போடுவது பொது இடங்களில் முகமூடி அணிவது, நோய்வாய்ப்பட்டவர்களை தவிர்ப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களை தவிர்ப்பது போன்றவற்றால் மட்டுமே குழந்தைகளையும் உங்களையும் பத்திரமாக பார்த்துகொள்ள முடியும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.