Share on Social Media


கோயம்புத்தூர்: 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், இரண்டு வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிபிஇ கிட்களை தமிழக அரசுக்கு நன்கொடையாக வழங்கியது ஈஷா அறக்கட்டளை. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழக அரசிடம் கோவிட் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கோவிட் -19 நிவாரணப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் நான்கு பேரும், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துக் கொண்டனர். மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா (Coronavirus) பாதிப்பு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஈஷா அறக்கட்டளையின் ’இஷா கோவிட் திட்டம்’ (Isha COVID Action agenda) திட்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மச்சாரிகள், முழுநேர தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் என ஈஷா தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல கிராமங்களில் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஈஷா அறக்கட்டளையால் கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளில், ‘நிலவேம்பு கஷாயம்” அன்றாடம்  மக்களுக்கு வழங்கப்படுகிறது. 
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும், உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதற்கும் சத்குரு சிறப்பாக வடிவமைத்த யோகாசனங்களையும் ஈஷா தொண்டர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். 

Also Read | “மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!

இதோடு, முன்களப் பணியாளர்களுக்கு பானங்கள் மற்றும் உணவுகளையும் ஈஷா அறக்கட்டளை வழங்குகிறது. மேலும், முகக்கவசங்கள், சானிடைசர்கள், பிபிஇ கிட் ஆகியவற்றையும் இஷா அறக்கட்டளை விநியோகித்து வருகிறது.

தற்போது, தமிழகத்தில் தினசரி கிட்டத்தட்ட 34,000 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகின்றன. கடந்த சில நாட்களாக தினசரி இறப்புகள் 450 க்கும் அதிகமாக இருக்கிறது. மாநிலத்தில் 3.10 லட்சத்திற்கு மேல் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கோயம்புத்தூரில் இப்போது தினசரி 4,700 வழக்குகள் பதிவாகின்றன.

#வைரஸைவெல்வோம் என்று கொரோனாவுக்கு எதிராக ஈஷா அறக்கட்டளை தொடங்கிய போராட்டத்தில், உள்ளூர் மக்கள், தன்னார்வலர்கள், சமையல் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமத்தலைவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மற்றவருக்காக சேவை செய்ய வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள். உணவு விநியோகம், மருந்துவப் பொருட்கள் மற்றும் நிலவேம்பு கசாயம் விநியோகம் என இஷா அறக்கட்டளை மக்களுக்கு பிணி தீர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

Also Read | முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *