Share on Social Media


IAS அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ | ’கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை’ தமிழக அரசு உத்தரவு ஏன்?

இந்தியாவில் பணிபுரியும் அனைத்து IAS அதிகாரிகளும் அவர்கள் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், அதேபோல அவர்களது குடும்பத்திலுள்ள நபர்களின் பெயரிலோ அல்லது நண்பர்கள், பிற நபர்கள் என அனைத்து தரப்பினரின் பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்களை அனைவரும் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு சொந்தமாகவோ, குத்தகைக்கோ அல்லது அடமானம் வைத்திருக்கும் சொத்துக்கள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  இதனையடுத்து சரியான காரணமின்றி சொத்து விவரங்களை IAS அதிகாரிகள் யாரும் தெரிவிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது எவ்வித பாகுபாடுமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் IAS அதிகாரிகள் மேற்கண்ட சொத்து விவரங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள்ளாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.

ALSO READ | சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் – மத்திய அரசு தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *