Share on Social Media


தேனி மாவட்டம்: தமிழக அரசு முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை மற்றும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தாமல் கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்து விட்டது ஆகியவற்றைக் கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணாமலை கூறியது, “தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சிய அடைந்ததாகவும் மேலும் வளர்ச்சிக்காக பாடுபட தன்னை பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

அவர் முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்க பாஜக ஆரம்ப கட்ட போராட்டத்தை தான் தொடங்கி இருக்கிறது. அணையில் 142 அடி நீர் தேக்கி வைக்கும் வரை மக்களை ஒன்று சேர்ந்து முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்க பாஜகவினர் தயாராக இருக்க வேண்டும் எனவும், அணை விவகாரங்களில் எல்லா மாநிலங்களிலும் ஒரே நிலைப்பாடு தான். அணை பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதில் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார். 

ALSO READ |  முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; வதந்தியை நம்ப வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன்

பென்னி குயிக் மக்களுக்காக முல்லை பெரியாறு அணையை கட்டினார். சுதந்திரத்திற்கு பின் முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு 999 வருட குத்தகைக்கு கேரள அரசிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் பின் 152 அடிக்கு நீர் தேங்கி வைக்கப்பட்டிருந்த முல்லை பெரியாறு அணையை படிப்படியாக திட்டம் தீட்டி குறைத்து விட்டதாகவும், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 138.95 அடியை எட்டியது. 

அப்போது கேரளா அமைச்சர்கள் முன்னிலையில் கேரளா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடபட்டது உச்சகட்ட அலங்கோலம் எனவும் தமிழகத்தின் உரிமையை முதல்வர் அடகு வைத்துவிட்டாட்டதாகவும். 1979-ல் அணையை பலப்படுத்த ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் நடந்து முடிந்த பின்னரும் அணையின் நீர் மட்டம் உயர்த்தப்படாமல் இருப்பதால் அதனை நம்பியுள்ள 5 மாவட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பிழைப்பிற்காக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்வதாகவும் குற்றம் சாட்டினார். 

உலகில் மிக பலமான அணையாக முல்லை பெரியாறு அணை உள்ளபோதும் 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்துவதால் இரு மாநில மக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்ற நிலையில் நீர் மட்டத்தை உயர்த்தி மாநில உரிமையை மீட்டெடுக்க முதல்வர் ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார் எனவும் கூறினார். 

முல்லை பெரியாறு விவகாரத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ தற்போதைய நிலை குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை? அவர் நியாயத்தின் பக்கம் நின்று அணை உரிமைக்காக பாஜகவுடன் இணைந்து போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

ALSO READ |  பிருத்விராஜ் மேல் வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

தமிழக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்தவர்களும் கேரள அரசுக்கு ஆதரவான மனநிலையில் செயல்படுகின்றனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் கேரள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு தேவை என்ற நோக்குடன் செயல்படுவதாகவும் விமர்ச்சித்த அண்ணாமலை, ஸ்டாலின் துணை பிரதமர் ஆகவும், உதயநிதி முதல்வர் ஆகும் கனவில் உள்ளதாகவும் கூறினார். 

ஆனால் 2024 தேர்தலில் 400 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் தெரிவித்தார். பாஜகவினரின் போராட்டத்தை ஒட்டி 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

ALSO READ |  முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *