Share on Social Media


சென்னை: கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் சிங்காரச் சென்னையின் இந்த கிராமத்தில் இளைஞர்களுக்கும் தடுப்பூசி, அதிலும் இலவசமாக போடப்படுகிறது. அதுமட்டுல்ல, தங்க நாணயங்கள், பைக்குகள், வாஷிங் மெஷின், வீட்டு உபயோக பொருட்கள் என பல பொருட்களையும் வெல்வதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய மீன்பிடி குக்கிராமம் கோவளம். இங்கு 16,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் கிராமம் கோவளம்.

கொரோனா உலகிற்கே பேரிடரை ஏற்படுத்தியது போல, இந்த கிராமத்தின் இயல்பு வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. கோவளத்தில் கோவிட் -19 பாதிப்பு இல்லை என்றாலும் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

“சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லை, கொரோனா தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதால் எங்கள் கிராமமும் பாதிக்கப்பட்டது” என்று கிராமவாசிகள் தெரிவித்தனர்.

Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…

தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவும் கிராமவாசிகள் தயாராகவில்லை.  கிராம மக்கலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், முகக்கவசங்கள், நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை சில தன்னார்வ நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன.

ஆனால், தடுப்பூசி போடுவது பற்றி பேசினால் அதற்கு யாரும் தயாராகவில்லை. அதனால், – தடுப்பூசிகளை மட்டும் இலவசமாக வழங்காமல், அதோடு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று புதிய கோணத்தில் சிந்தித்தனர்.

எஸ்.டி.எஸ் அறக்கட்டளை (STS Foundation), சி.என்.ராம்தாஸ் (CN Ramdas), சிராஜ் டிரஸ்ட் (Chiraj Trusts) இணைந்து இந்த கிராமத்தில் தடுப்பூசி இயக்கத்தை ஊக்கப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கின.

Also Read | Google Photos: கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை, கட்டண விவரங்கள்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மொபைல் போன் ரீசார்ஜ் முதல் பிரியாணி போன்ற குறுகிய கால சலுகைகளை தினசரி அடிப்படையில் வழங்கத் தொடங்கினர். 

அத்துடன் நீண்ட கால பம்பர் பரிசுகளாக, தங்க நாணயங்கள், சலவை இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், பைக்குகள், இண்டக்சன் அடுப்புகள், சமையல் செய்யும் அடுப்புகள் (LPG cooktops) என பல பொருட்களை குலுக்கல் முறையில் (lucky draw) பரிசாக வழங்குகின்றனர்.

இந்த உத்தி பலிக்கத் தொடங்கிவிட்டது. தடுப்பூசி மையத்திற்கு கிராமவாசிகளை அழைத்து வருவதற்கு வாகனங்கள் (இலவசம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு லக்கி டிரா டோக்கன் வழங்கப்படுகிறது. இறுதியில் பம்பர் லக்கி டிராவில் யாருக்கு என்ன கிடைக்கிறது என்பது தெரியும்.

Also Read | கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்

“தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுள்ள 6400 க்கும் மேற்பட்டவர்களில், நாங்கள் 640 நபர்களுக்கு  வெற்றிகரமாக தடுப்பூசி போட்டுள்ளோம். முதல் இரண்டு நாட்களில் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முதல் டோஸ் வழங்கியுள்ளோம். எங்களுடைய இலவச அறிவிப்புகள் தொடர்பான தகவல்கள் தற்போது கிராமத்தில் வேகமாகப் பரவி வருவதால், எதிர்வரும் நாட்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம், அனைவருக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி போட முடியும் என்று நம்புகிறோம்” என்று எஸ்.டி.எஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் ஜே.சுந்தர்  தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு கொள்வதற்காக ஹெல்ப்லைன் எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். கோவளம் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த அழகிய கடலோர குக்கிராமம் மற்றும் சர்ஃபிங் ஹாட்ஸ்பாட்டை (surfing hotspot) ஒரு மாதிரி தடுப்பூசி கிராமமாக வரைபடத்தில் வைக்க முயல்கின்றன.

Also Read | கொரோனா மரணம்: 2 ஆண்டுகளுக்கு ESIC, EPFOவில் சிறப்புச் சலுகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *