Share on Social Media

மெட்ராஸ் அருங்காட்சியகம் – எழும்பூர்!

கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் மற்றும் இன்னும் பலவற்றின் தலைசிறந்த களஞ்சியமாக விளங்கும் மெட்ராஸ் அருங்காட்சியகம் எல்லோரும் காண வேண்டிய இடங்களில் மிகவும் முக்கியமானது. ஆனால், சென்னை எங்கிலும், பெரிய பெரிய ஷாப்பிங் மால்களும், திரையரங்குகளும் வந்துவிட்டதால் இதுமாதிரியான பொக்கிஷ இடங்களை பெரும்பாலானவர்கள்  கண்டுகொள்வதில்லை. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், 16.25 ஏக்கர் நிலப்பகுதி முழுவதும் பரவி, தெற்காசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியமாக திகழ்கிறது. சென்னை எழும்பூரில் அமைத்துள்ள இதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட ஆறு கட்டடங்கள் உள்ளன. 

பிரதான கட்டடத்தில், கடந்த காலத்திலிருந்து கலைப்பொருள்கள் மற்றும் சிற்பங்களைக் காணலாம். அழகிய சிற்பங்கள், ஆயுதங்கள், ஆர்மர், தென்னிந்திய இசைக்கருவிகள், கற்கால நகைகள் எனத் தனிப் பிரிவுகள் இருக்கின்றன. வெண்கலத் தொகுப்பு, நாணயவியல் மற்றும் இரசாயன பாதுகாப்புக் காட்சியகங்கள் உள்ளன. இப்படி இங்கிருக்கும் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அனைவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டிய அறிவுப் புதையல்தான் இந்த அருங்காட்சியகம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *