Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • பக்கவாதம், அல்சைமர்ஸ், டிமென்ஷியா குறைபாடுகள் 7 மடங்கு வருவதற்கான அபாயத்தை கார்பனேட்டட்
  • குழந்தைகள் சாப்பிட வேண்டிய சர்க்கரையில் 30% இந்த கார்பனேட்டட் பானங்களிலிருந்து..


செப்டம்பர் முதல் வாரம் 1 முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரமாக கொண்டாடப்படுகிறது. ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அப்படியே உணவு குறித்த விழிப்புணர்வும் அவசியம். ஏனெனில் உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை. திரவ உணவுகள் உடலில் நீரிழப்பை தடுக்கின்றன. அதே நேரம் எல்லா திரவ பானங்களும் உடலுக்கு ஏற்புடையதல்ல. குறிப்பாக கார்பனேட்டட் பானங்கள் என்கிறார் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பரிமளாதேவி குமாரசாமி.

இன்று குழந்தைகள், டீன் ஏஜ் தலைமுறையினர், சமயங்களில் வளர்ந்தவர்கள் கூட பாட்டில், கேன், டின்களில் அடைக்கப்பட்டுள்ள பானத்தை குடிப்பதை சந்தோஷமாக செய்கிறார்கள். கேட்டால் தாகம் தணிக்க உதவும் பானங்கள் என்று இதை சொல்கிறார்கள்.

இந்த கார்பனேட்டட் பானங்கள் என்ன சத்து கொண்டுள்ளதோ என்றால் இதில் மேக்ரோநியூட்ரிஷியஸ் என்று சொல்லகூடிய கார்போஹைட்ரேட்ஸ் அதாவது மாவுச்சத்தும் இல்லை. இதில் புரதச் சத்தும் இல்லை, நல்ல கொழுப்பும் இல்லை. மைக்ரோநியூட்ரியன்ஸ் என்று சொல்லக்கூடிய எந்த வைட்டமின்கள் ஏ, பி,சி,டி, கே போன்றவையும் கிடையாது. நமது உடலுக்கு மினரல்கள் தேவை. அவை எதுவும் இந்த கார்பனேட்டட் பானங்களில் இல்லை.

Black Chickpea :தினமும் அரை கப் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டா உடம்புல என்ன மாற்றம் நடக்கு

இதில் இருப்பது கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ளது. இதை திறக்கும் போது நுரை ததும்பி வழியும் இதை பார்க்கும்போதே அலாதியான பருக விருப்பமான பானமாகிறது. பொதுவாக கார்பன் டை ஆக்ஸ்டை என்பது நாம் மூச்சில் ஆக்ஸிஜனை இழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறோம். ஆனால் இந்த பானங்களில் கார்பன் டை ஆக்ஸைடை தான் நாம் குடிக்கவே செய்கிறோம். இது நல்லதா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் குறித்து தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்வதில் குழந்தைகள் தங்கள் சாப்பிட வேண்டிய சர்க்கரையில் 30% இந்த கார்பனேட்டட் பானங்களிலிருந்து பெறுவதாக சொல்கிறது. இது அதிர்ச்சிகரமானது. அதே நேரம் இதை குழந்தைகள் நேரடியாக கடைகளுக்கு சென்று வாங்குவதில்லை. குழந்தைகளுக்கு குடிக்க பழகுவதே பெரியவர்கள் தான். அதனால் தான் பெரியவர்கள் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.

இந்த கார்பனேட்டட் பானங்களில் சோடியம் பென்சோயிட் என்னும் இரசாயனம் உள்ளது. இது குழந்தகளின் மெண்டல் மோட்டாட் எபிலிட்டியை பாதிக்கிறது. நினைவுத்திறன் குறைக்கிறது. யோசிக்காமல் பேசுதல் அல்லது செயல்படுதல் , கவனச்சிதறல் ஆன சிக்கலான நரம்பியல் வளர்ச்சித் தொடர்பான Attention Deficit – Hyperactivity Disorder (ADHD) குறைபாட்டை உண்டாக்க காரணமாகிறது.

உடல் பருமன்

உடல் பருமனை அதிகரிக்க கூடியதாக கார்பனேட்டட் பானங்கள் செயல்படுகிறது.

தூக்கத்தை பாதிக்கிறது

குழந்தைகளின் தூக்க நேரம் மற்றும் தூத்தத்தின் தரம் இரண்டையும் பாதிக்கிறது. குழந்தைகள் , பதின்ம வயதினர் குறிப்பாக பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணி

பெண் கர்ப்பகாலத்தில் அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் கார்பனேட்டட் பானங்கள் எடுக்கும் போது குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கிறது. குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கிறது.

2006 ஆம் ஆண்டு 2500 பெண்களை கொண்டு ஆராச்சி செய்யப்பட்டது. அப்போது கார்பனேட்டட் பானங்கள் நன்மையா, தீமையா என்று செய்யப்பட்ட ஆய்வில் கார்பனேட்டட் பானங்களில் இருக்க கூடிய பாஸ்பரஸ் கால்சியத்தை சிறுநீரகத்தில் இருந்து எடுத்துகொள்கிறது. இது எலும்பு அடர்த்தியை குறைந்தது கண்டறியப்பட்டது.

மாதவிடாய் நாளில் வெந்தயம் சாப்பிட கூடாது, மருத்துவர் சொல்லும் காரணங்கள், வலிக்கான தீர்வுகள்!

2015ஆன் ஆண்டு கார்பனேட்டட் பானங்கள் மூளைத்திறனை எப்படி பாதிக்கிறது என்பதை கண்டறிய முயற்சி செய்தபோது இது டோபமைன் அளவு, கபா எல்லாவற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்து மூளை வளர்ச்சியை பாதித்தது கண்டறியப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மற்றொரு ஆய்வு ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். பக்கவாதம், அல்சைமர்ஸ், டிமென்ஷியா போன்ற மூளை சம்பந்தமான குறைபாடுகள் 7 மடங்கு வருவதற்கான அபாயத்தை கார்பனேட்டட் பானங்கள் உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஏன் இதை விரும்பி குடிக்கிறோம். இது மகிழ்ச்சியை ஆர்ப்பரிப்பை உற்சாகத்தை கொடுக்கிறது. இன்னும் இன்னும் அதிகமாக குடிக்க வேண்டும் என்னும் உணர்வை தூண்டுகிறது. அதிக இனிப்பு கொண்டுள்ளதால் மீண்டும் நாடத்தொடங்குகிறோம். அதிக இனிப்பு சாப்பிட தூண்டுகிறது. நல்ல விஷய தூண்டுதல் எதுவும் இல்லை.

கார்பனேட்டட் பானங்கள் தயாரிக்கும் போது இது குறித்து பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது. எனினும் நாள் பட நாள்பட இதை தொடர்ந்து குடிக்கும் போது அதிகமாக எடுக்கும் போது இவை உடலில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. பற்களிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.

எலும்பு அடர்த்தி

கார்பனேட்டட் பானங்கள் தொடர்ந்து அதிகமாக எடுக்கும் போது அது உடலில் ஜீன் மாற்றத்தையே உருவாக்கும் அளவு அபாயம் உண்டு. இந்த பாதிப்புகளை அளிக்க கூடிய பானங்கள் தேவையா என்பதை யோசிக்க வேண்டும்.

கார்பனேட்டட் பானம் தேவைப்படும் போது இயற்கையாகவே நமக்கு மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா, உலர் திராட்சை, சீதாப்பழம், பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இவை இனிப்பு தேவையை பூர்த்தி செய்து விடும் இளநீர், மோர், நுங்கு போன்ற இயற்கை பொருள்கள் நம்மிடம் இருக்கும் போது எதற்கு இதை நாட வேண்டும்.

நீங்கள் கார்பனேட்டட் பானங்களை அதிகம் குடிப்பவர்களாக இருந்தால் முதலில் அதை கட்டுப்படுத்துங்கள். இயன்றவரை இதை தவிர்த்து இயற்கையை நாடுவது உடலுக்கு நல்லது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *