Share on Social Media

பலர் கூடிய உடை எடையைக் குறைக்க பல சிகிச்சைகளுக்கும், ஜிம்களுக்கும் பல ஆயிரத்தை வாரி இரைத்தும் உடல் எடை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நாம் உண்ணும் உணவின் மூலமும் நமது உடல் எடையைக் குறைக்கலாம் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால், அதற்கு எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று குழப்பமும் ஏற்படுகிறது. அந்த குழப்பத்தை தீர்க்கவே இந்த தொகுப்பு உங்களுக்காக.

​எடை இழப்பும் பிரெட்டும்

எடை குறைக்க எல்லோரும் பிரெட் சாப்பிடலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எந்த வகையான பிரெட் சாப்பிடலாம் என்பதில் குழப்பமே நிலவுகிறது. நீங்கள் ஒரு ஆரோக்கியமான பிரெட்டைத் தான் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரெட் எடை குறைப்புக்கு சிறந்த உணவு தான் என்றாலும், அதில் அதிக அளவில் கார்போ ஹைட்ரேட்டுகள் உள்ளன. அதுமட்டுமின்றி, அதிகளவில் பிரெட் சாப்பிடும் போது அதிலுள்ள கார்ப்ஸ் மூலம் கொழுப்பும் உருவாகிறது. ஆனாலும், சிலவகை தானியங்களின் மூலம் உருவாக்கப்படும் பிரெட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பிரெட்டினை உண்பதன் மூலம் மட்டுமே எடை இழப்பு சாத்தியப்படும்.

உங்கள் உணவுப் பட்டியலில் நீங்கள் பிரெட்டை சேர்க்க விரும்பினால், அப்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

​வெள்ளை பிரெட்

samayam tamil Tamil News Spot

நாம் அனைவராலும் சாப்பிடப்படும் வெள்ளை பிரெட் குறைந்த அளவிலான ஊட்டச்சத்தினை மட்டுமே கொண்டது. இதனை பதப்படுத்தி தயாரிக்கும் போது அதில் உள்ள அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் அகற்றப்பட்டு, நமக்கு குறைந்த அளவிலான ஊட்டச்சத்து மட்டுமே கிடைக்கும். வெள்ளை பிரெட்டில் அதிக அளவில் கலோரிகள் உள்ளதால், அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும். இதனால், அதிக அளவில் உணவு உட்கொண்டு உடை எடை அதிகரிப்பு தடுக்கப்படும்.

​பிரவுன் பிரெட் அல்லது வீட் பிரெட்

samayam tamil Tamil News Spot

வெள்ளை பிரெட்டுடன் இந்த பிரவுன் பிரெட்டை ஒப்பிடும் போது பிரவுன் பிரெட்டே சிறந்தது ஆகும். முழுமையாக கோதுமை கொண்டு செய்யும் இந்த பிரவுன் பிரெட்டில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன. பிரெட் தேர்வு செய்யும் போது பிரவுன் பிரெட்யை தேர்வு செய்வதே சிறந்ததாகும். அதில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்ததில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் இயக்கங்களை இயல்பாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.

அதுமட்டுமின்றி, பிரவுன் பிரெட்டை சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், இரைப்பை குடல் கோளாறு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றைக் குறைக்க உதவும். ஒரு துண்டு பிரெட் குறைந்த அளவிலான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளன. ஆகவே நீங்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் பிரவுன் நிற பிரெட்டையே தேர்வு செய்யவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

​பல தானிய பிரெட்

samayam tamil Tamil News Spot

பல தானிய பிரெட் என்று அழைக்கப்படும் மல்டிகிரெய்ன் பிரெட்டில் கோதுமை, பார்லி, சோளம், ஓட்ஸ், ஆளி விதை மற்றும் திணை போன்ற தானியங்கள் உள்ளன. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும், பல வகையான தானியங்கள் கொண்டு செய்வதன் மூலம் இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. ஆகையால், இந்த மல்டிகிரெய்ன் பிரெட் உடல் எடை இழப்புக்கு ஏற்றது. ஏனெனில், இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதோடு உங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். அதிகப்படியான பசியின் மூலம் உண்பதையும் இது தடுக்கும். இதனால் உங்கள் உடல் எடை உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே, பெண்களே உங்கள் உடல் எடையை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க மல்டிகிரெயின் பிரெட்டே சிறந்ததாகும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *