Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • ஜூன் 21ஆம் தேதி ஊரடங்கு தளர்வு உறுதி
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டம்

பிரிட்டனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. ஜூன் 21ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், டெல்டா வைரஸ் என அழைக்கப்படும் இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஊரடங்கு நிச்சயம் தளர்த்தப்படும் எனவும், ஊரடங்கை தொடருவதற்கு எந்த காரணமும், புள்ளிவிவரங்களும் இல்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

எல்லாருக்கும் இலவச பீர்.. அரசே வெளியிட்ட அடடே அறிவிப்பு!
இதுகுறித்து அவர் பேசியபோது, “ஜூன் 21ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படும். ஊரடங்கை தளர்த்தாமல் இருப்பதற்கு எந்த தேவையும் இல்லை. எனினும் மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கொரோனா பாதிப்பு உயரும் என நமக்கு ஏற்கெனவே தெரியும். ஊரடங்கை தளர்த்தும்போது பாதுகாப்பாக இருக்காவிட்டால் கொரோனா பாதிப்பு உயரலாம். தடுப்பூசி போடும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *