Share on Social Media


நம் உடலின் உறுப்புகளுக்கு முக்கிய அம்சம் எலும்புகள் தான். அவை தான் உடலுக்கு உரிய கட்டமைப்பையும், வலிமையையும் வழங்கும். அதோடு தசைகளை பாதுகாக்கவும், உறுப்புகளை பாதுகாக்கவும் எலும்புகள் மிகவும் அவசியம்.

அப்படிப்பட்ட எலும்புகள் வலிமையின்றி போனால் அவை உங்களை பலவீனமைடயச் செய்யும். எலும்புகளின் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது உடலின் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும். இதனைத் தவிர்க்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். அப்படி இயற்கையாகவே எலும்புகளை வலுப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

​எலும்புகளை பலவீனமாக்கும் உணவுப் பழக்கம்

தற்போதைய உணவுப் பழக்கம் நமது எலும்புகளை பெரிதும் பாதிக்கிறது. ஏனெனில், நாம் சாப்பிடும் பல உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏதும் இருப்பதில்லை.

இதுபோன்ற உணவுகளையே தொடர்ந்து எடுத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

​மெக்னீசியம் நிறைந்த காலை உணவுகள்

samayam tamil Tamil News Spot

நட்ஸ் வகைகளான முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மட்டுமின்றி சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சோயா விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதன் அடர்த்தியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவும். நட்ஸ் சாப்பிட விரும்புவோர் இரவு முழுவதும் அதனை ஊற வைத்துவிட்டு பின் காலையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அதேபோல், சியா விதையை காலையில் ஒரு கிளாஸ் வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாப்பிடலாம்.

இந்த பழங்களை எல்லாம் சாப்பிடும்முன் தோல் சீவக்கூடாது… ஏன் தெரியுமா?

​கால்சியம் நிறைந்த உணவுகள்

samayam tamil Tamil News Spot

நம் உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்கள் கால்சியத்தால் ஆனது ஆகும். இவை தான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான தாதுக்கள் ஆகும். பொதுவாக நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படும்.

பெரும்பாலும் மதிய உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் பால் பொருட்களான பன்னீர் போன்றவை, பச்சை இலை காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மெக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சிறந்த ஆதாரமாகும்.

உடம்பு எப்பவும் சோர்வாவே இருக்கா… இந்த 5 பானங்கள்ல ஒன்னு குடிங்க… உடனே சுறுசுறுப்பா துள்ளி குதிப்பீங்க…

​புரதம் நிறைந்த உணவுகள்

samayam tamil Tamil News Spot

எலும்புகள் 50 சதவீதம் புரதத்தால் ஆனது. அதனால் போதுமான அளவு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதேபோல், இவை கால்சியத்தை உறிஞ்சவும் உதவும்.

காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இது புரதம் நிறைந்த சிறந்த உணவாகும். அதேபோல், வறுத்த கொண்டைக்கடலை, ஹம்முஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது சுவையுடன், ஆரோக்கியத்தையும் உங்களுக்கு அளிக்கும்.

water benefits: சாப்பிடும் முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பது நல்லதா? அப்படி செய்தால் என்னென்ன பக்க விளைவுகள் வரும்…

​தூங்கும் முன் பால் அருந்துவது

samayam tamil Tamil News Spot

படுக்கைக்கு செல்லும் முன் எப்போதும் ஒரு கிளாஸ் பால் குடிப்பது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஏனெனில், பாலில் புரதச் சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

அதுமட்டுமின்றி, இரவில் மஞ்சள் தூள் கலந்த பாலை அருந்துவது உங்களை வலிமையாக்க உதவும். அதோடு, இதன் மூலம் நல்ல தூக்கம் கிடைக்கும்.

weight lose: மார்பகத்தின் அளவு குறையாமல் உடல் எடையை மட்டும் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

​யோகாசனங்கள்

samayam tamil Tamil News Spot

சில வகை ஆசனங்கள் மூட்டு வலியைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் மட்டுமின்றி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளையும் தடுக்க உதவும். அவை என்னவென்றால், ஏகபாதாசனம் மற்றும் நடராஜாசனம். இவை ஒற்றைக் காலால் செய்யும் ஆசனங்கள்.

அதுமட்டுமின்றி, அதோ முக ஸ்வனாசனத்தையும் முயற்சிக்கலாம். யோகாசனம் மட்டுமின்றி, ஸ்கிப்பிங், ஜாக்கிங், வாக்கிங் போன்றவற்றையும் முயற்சி செய்யலாம்.

இதனால் உடல் எடை குறையும். உடலுகேற்ற சரியான உடல் எடையை விட அதிக எடை கூட எலும்புகளை வலுவிழக்கச் செய்து உங்களை பலவீனமாக்கும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.