Share on Social Media


நம்மில் சிலருக்கு அடிக்கடி வயிறு வீக்கம் ஏற்படும். குறிப்பாக உணவு உண்ட பின்னர் வயிறு வீங்கி பெரிதாக காட்சியளிப்பது அசௌகரியமான நிலையாகவும் தோன்றும். இது வயிற்றில் அதிகப்படியான வாயு உற்பத்தியாகிறது என்பதற்கான அறிகுறியாகும். குறிப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துதலும், மலச்சிக்கல் போன்றவையும் இதற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

​இரு வகையான பாதிப்புகள்

உடலில் வயிறு வீக்கம் இரண்டு வகைகளில் ஏற்படுகிறது. ஒன்று இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாவது. மற்றொன்று வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால் வீக்கம் ஏற்படுகிறது.

நாள்பட்ட வீக்கத்துடன் ஒப்பிடும்போது எப்போதாவது ஏற்படும் வீக்கம் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இதனை விரைந்து சரி செய்தல் நல்லது. மேலும் நீங்கள் நீண்டகாலமாக அதே பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

​காய்கறிகள்

samayam tamil Tamil News Spot

நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் பலவீனமான செரிமான மண்டலம் உள்ளவர்களுக்கு எளிதில் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் புதிதாக அதிக நார்ச்சத்து இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

எடையும் ஊளைச்சதையும் குறையணுமா? வாரத்துல ரெண்டு நாள் இந்த சுரைக்காய் சூப் குடிங்க… ரெசிபி இதோ…

​பழங்கள்

samayam tamil Tamil News Spot

ஆப்பிள், பேரிக்காய், கருப்பு உலர் திராட்சை மற்றும் பீச் பழங்களில் சோர்பிட்டால் என்னும் ஒரு வகையான சர்க்கரை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதனால் இவற்றை உட்கொண்டால் அவை எளிதில் செரிமானமாகாது. எனவே வாயு மற்றும் வயிறு வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் இதனை அதிக அளவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

​முழு தானியங்கள்

samayam tamil Tamil News Spot

முழு தானியங்களான கோதுமை, ஓட்ஸ், தவிடு போன்றவற்றால் வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் இதில் இருக்கும் க்ளூட்டன் புரதம் தான். இது பலருக்கும் அலர்ஜி, வாயு, மலச்சிக்கல், தைராய்டு பிரச்சினை போன்ற பல சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

மலத்தை நேரத்திற்கு வெளியேற்றாமல் அடக்கி வைத்தால் என்ன மாதிரியான பிரச்சினைகள் உண்டாகும்…

​பருப்பு வகைகள்

samayam tamil Tamil News Spot

பருப்புகள் அனைத்தும் புளிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தி வயிற்றில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அதிக பருப்பு வகைகளைசாப்பிடுவதால், நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வராமல் போய்விடுகின்றன. எனவே மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயா பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.

​கார்பனேட்டட் பானங்கள்

samayam tamil Tamil News Spot

கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் சோடாக்கள் உங்கள் உடலில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகரிக்து வயிறு வீக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் பானங்களை முற்றிலும் தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர், இளநீரை குடிக்கலாம். அதேசமயம் வாயு, அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதை தவிர்க்க இஞ்சி மற்றும் புதினா தேநீரை அருந்துவது நல்லது.

இந்த பழங்களை எல்லாம் சாப்பிடும்முன் தோல் சீவக்கூடாது… ஏன் தெரியுமா?

​செயற்கை இனிப்புகள்

samayam tamil Tamil News Spot

சூயிங் கம் உள்ளிட்ட இனிப்பு மிட்டாய்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால் இதனை சாப்பிடும் போது காற்றினை உள்ளிழுப்பதால் அது வயிற்றில் வாயு, வீக்கம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

எனவே இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து உடலுக்கும், வயிற்றுக்கும் ஆரோக்கியமளிக்கும் உணவு வகைகளை எடுக்க முயற்சியுங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.