Share on Social Media

“மூக்குப் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, அதீத சளித் தொந்தரவு, சளியில் ரத்தம் வருதல், இருமும்போது ரத்தம் வருதல், கண் வீக்கம் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை ஏற்படும்போது உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு விடுவது சிறந்தது. கரும்பூஞ்சைத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் அது தாக்கியிருக்கும் பகுதியை மட்டும் அகற்றிவிடலாம். இல்லையென்றால் உடலில் அதன் தாக்குதல் பரவி உயிருக்கே உலை வைக்கும் நிலை ஏற்பட்டுவிடும். கண்ணில் தாக்கினால் கண்ணை அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் பார்வை நரம்புகளின் துளை வழியாகச் சென்று மூளையைத் தாக்கிவிடும் அபாயம் உள்ளது.

எனவே, மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாகக் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்பவர், ஆம்போடெரிசின் – பி மருந்து பற்றிச் சொன்னார்.

“கரும்பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டுள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, ஆம்போடெரிசின் – பி மருந்தைச் செலுத்துவதன் மூலம் அது மற்ற உறுப்புகளுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும்.

மருத்துவர் ரவீந்திரநாத்

மருத்துவர் ரவீந்திரநாத்

ஆம்போடெரிசின் – பி மருந்துக்கான தேவை இதுவரை பெரிய அளவில் இருந்ததில்லை. ஆகவே இந்தியாவில் நான்கைந்து மருந்து நிறுவனங்கள் மட்டுமே இம்மருந்தை குறைந்த அளவில் உற்பத்தி செய்து வந்தன. ஆகவேதான் அதற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது சரியான முடிவு. அதே போல் நம் நாட்டிலேயே அம்மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரும்பூஞ்சைத் தாக்குதல் எதனால் ஏற்படுகிறது என்கிற ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சரியான காரணங்கள் கண்டறியப்படும்போதுதான் அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களே பெரும்பாலும் கரும்பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தொற்று ஏற்படாதபடி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடப்பதே இச்சூழலில் முக்கியமானது” என்கிறார் ரவீந்திரநாத்.

தமிழகம், டெல்லி, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கரும்பூஞ்சை தொற்றை Epidemic ஆக, அதாவது, பெருவாரியாகப் பரவும் நோயாக அறிவித்துள்ளன. மற்ற மாநிலங்களும் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *