Share on Social Media


பெர்லின்: அந்தரங்க உறுப்பில் செய்து 278 முறை துளை போட்டுக் கொண்ட நபரைப்பற்றித் தெரியுமா? ஆனால், இது அவரது படுக்கையறை வாழ்க்கையை பாதிக்கவில்லை என்று, தனது அந்தரங்க வாழ்க்கையைப் பற்றியும் சொல்கிறார்..

கின்னஸ் உலக சாதனை படைத்த ரோல்ஃப் புச்சோல்ஸின் உடல் முழுவதும் ஓட்டைகள் என்றே சொல்லலாம். அவரது அந்தரங்க உறுப்பில் மட்டும் 278 துளைகள் போட்டிருக்கிறார். 

அந்தரங்க உறுப்பில் சிறு காயம் ஏற்பட்டாலே பதறுபவர்கள், காதல் வாழ்க்கையையே காயம் ஆறும் வரை ஒத்திப்போடுவார்கள். காயம், பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் என்ற கருத்தை மாற்றிச் சொல்கிறார் ரோல்ஃப்.  

ஜெர்மனியில் வசிக்கும் ரோல்ஃப், பச்சைக் குத்திக் கொள்வதில் மிகுந்த மோகம் கொண்டவர். ஒரு கட்டத்தில் அது ஒரு வெறியாக மாறிவிட்டது போலத் தெரிகிறது. 

ஆனால், இந்த விசித்திரமான பழக்கத்தால், அவரது பெயர் கின்னஸ் உலக சாதனையிலும் (Guinness Record) பதிவாகியுள்ளது. உடலில் மொத்தம் 453 உலோகத் துளைகளைக் கொண்ட இந்த கின்னஸ் சாதனையாளரின் பெயர் ரோல்ஃப் புச்சோல்ஸ்.

Also Read | நாக்கால் மின்விசிறியை நிறுத்த முடியுமா?

‘வெளியில் இருந்து மாறுங்கள், உள்ளே இருந்து அல்ல’
ரோல்ஃப் புச்சோல்ஸ் தனது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஓட்டை போட்டிருக்கிறார். ஓட்டை போடாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு துளையிட்டு அதில் அலங்காரமாக ஆபரணங்களையும் போட்டிருக்கிறார்.

அந்தரங்க உறுப்பையும் விட்டு வைக்காத இந்த வினோதமான மனிதர், அங்கு மட்டும் 278 துளைகள் போட்டிருக்கிறார்! கேட்கும்போதே வித்தியாசமாக இருந்தாலும், ரோல்ஃபின் பாலியல் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வியை யாராலும் எழுப்பாமல் இருக்க முடியாது. 

இந்த விசித்திரமான மனிதர், தனது பாலியல் வாழ்க்கையைப் பற்றியும் பகிரங்கமாக பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். தனது உடலில் தெரியும் மாற்றங்கள் அனைத்தும், வெளியில் மட்டும்தான், அது தனது பாலியல் விருப்பத்தையோ, தகுதியையோ அல்லது செயல்படும் திறனையோ மாற்றவில்லை எனவே, தனது பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றும் ரோல்ஃப் கூறுகிறார்.

உடல் முழுவதும் டாட்டூக்கள் 
61 வயதான ரோல்ஃப் உடலில் துளையிட்டு ஆபரணங்கள் அணிவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. வேறு பல வழிகளிலும் தனது உடலை மாற்றியமைத்துள்ளார். அவரது உடலில் பல்வேறு விதமான பச்சை குத்தப்பட்டிருக்கிறது.

Read Also | வேற லெவலில் ஆட்டோ ஓட்டி கின்னஸ் சாதனை செய்த ஆட்டோகாரர்

தலையில் இரண்டு கொம்புகளையும் பொருத்திக் கொண்டிருக்கிறார். 40 வயதாக இருந்தபோது, ​​​​தனது உடல் மாற்றத்தை விரும்பிய அவர் தொடர்ந்து 21 ஆண்டுகளாக அதையே வேலையாக செய்துக் கொண்டிருக்கிறார்.

உதட்டில் 94 துளைகள்
ஜெர்மன் டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரியும் ரோல்ஃப், உதட்டில் 94 குத்திக் கொண்டுள்ளார். உடலில் 90 சதவீதம் அது மூடப்பட்டிருக்கும் வகையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் இந்த வித்தியாசமான மனிதர்.

ரோல்ஃப் இப்படி தன்னை மாற்றிக்கொள்வதால் அவரது படுக்கையறையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விமான நிலையத்தில் அவர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் இதுபோன்ற உடல் மாற்றங்கள் இன்னும் இயல்பானதாக மாறவில்லை என்பதால் விசாரணை அதிகமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, விமான நிலையத்தில் உலோகக் கண்டறிதல் கருவிகள், அவர் அருகில் சென்றவுடனே ஒலிக்கத் தொடங்குவிடும். அதற்கான விளக்கத்தை இந்த கின்னஸ் சாதனையாளர் சொல்லி, சொல்லி, அதுவே ஒரு கின்னஸ் சாதனை பதிலாகிவிடும் என்று தோன்றுகிறது.

ஒருமுறை துபாய் விமான நிலையத்தில் ரோல்ஃப் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? வேறு ஒன்றும் இல்லை ஜெண்டில்மேன், உங்களைப் பார்த்தால் சூனியம் செய்யும் சூனியக்காரன் போல் இருக்கிறது என்று அதிகாரிகள் சொன்னார்களாம்!

ALSO READ | உலகின் அதிக மைலேஜ் தரும் கார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.