Share on Social Media


தமிழ் திரையுலகில், சில நடிகைகள் சில படங்களிலேயே நடித்தாலும், ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்று விடுகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் பூமிகா சாவ்லாவும் ஒருவர். குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடித்தாலும், தனது அழகான முகம், அமைதியான தோற்றம் ஆகியவற்றால், அவருக்கு ரசிகர்களின் மனங்களில் நிலையான இடம் ஒன்று உள்ளது.

தமிழில்  சினிமாவில் (Tamil Cinema) கடைசியாக வெளியான நயன்தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் மூலம் பூமிகா சாவ்லா மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார். 

கண்ணை நம்பாதே படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி  விவரிக்கும் அவர், “கதையை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மையக் கதாப்பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். மேலும், உண்மையைச் சொல்வதென்றால், சாதாரண கதாபாத்திரங்களில்  நடிப்பதில் எனக்கு அலுப்பாக இருக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இது போன்ற  வேடங்களில் நடித்துள்ளேன். அதனால்தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை தேர்வு செய்தேன். 

ALSO READ | அதிக வியூஸ் கொண்டு சாதனை படைத்த வெந்து தணிந்தது காடு டீசர் 

எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு கவலையில்லை. ஒரு நடிகராக, வெவ்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் . தமிழ் சினிமா சில அற்புதமான உள்ளடக்கங்களை வழங்குகிறது. இனி தமிழில் அடிக்கடி பல படங்களில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். 

‘கண்ணை நம்பாதே’ படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை . ஆனால் வித்தியாசமான பரிமாணத்தில் நான் நடித்திருப்பதை நீங்கள் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.” என்றார்.

கொரோனா ஊரடங்கு காலத்தை எப்படி கடந்து வந்தீர்கள்  என கேட்கப்பட்டபோது, புன்னகையுடன் பதிலளித்தார். “நான் தொடர்ந்து யோகா செய்தேன், அமைதியான மனது மற்றும் வாழ்க்கை முறைக்காக தியானம் செய்து வந்தேன் , மகிழ்ச்சியாக மற்றும் பிஸியாக இருக்க முயற்சி செய்துகொண்டே இருந்தேன்” என்று அழகாக கூறினார். 

bhumika2 Tamil News Spot

சென்னையில் , சமீபத்தில் வரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் காணப்பட்ட பூமிகா சாவ்லா (Bhoomika Chawla), சென்னையை தனது இரண்டாவது வீடாக கருதுகிறார். மேலும் இங்குள்ள மக்களின் அன்பையும் அரவணைப்பையும் ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறார். பூமிகா சாவ்லா சமீபத்தில் தெலுங்கில் இரண்டு பிளாக்பஸ்டர் படங்களான  கோபிசந்தின் ‘சீட்டிமார் ‘ மற்றும் விஸாக் சென்னின் ‘பாகல்’ படங்களில் நடித்திருந்தார் .தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தனது அடுத்த சில சுவாரஸ்யமான படங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

ALSO READ | ரிலீஸுக்கு முன்பே ரூ 250 கோடி வசூல்; குஷியில் புஷ்பா படக்குழு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *