Share on Social Mediaதொல்லை தரும் கருவளையங்களை போக்க பல சிகிச்சைகளை முயற்சித்துள்ளீர்கள் என்றாலும் பல நேரங்களில் உங்களுக்கு அது கனவாகவே இருக்கும். சில நேரங்களில் இது சாத்தியமற்றதோ என்று கூட நினைக்கலாம். ஆனால் உறுதியான வழிகள் உங்கள் கருவளையத்தை விரட்ட செய்யும். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

​ரெட்டினோல் சிகிச்சை

கருவளையத்துக்கு ரெட்டினோல் சிகிச்சை பயன்படுத்தலாம். இது வயதான எதிர்ப்பு திறன்களுக்கு மட்டுமல்ல, இருண்ட வட்டங்களுக்கு சிகிச்சியளிப்பதற்கும் அறியப்படுகிறது. படுக்கைக்கு முன் ரெட்டினோல் அடிப்படையிலான கண் சீரம் பயன்படுத்துவது மெலனோசைட்டுகளை உறுதிப்படுத்துகிறது.

hair fall control tips : இந்த உணவுகள் உங்க முடி கொட்றதை கட்டுப்படுத்துமாம், தவிர்க்காம சாப்பிடுங்க!

இருண்ட வட்டங்களுக்கு பங்களிக்கும் தோலில் உள்ள கருமையான நிறமி உருவாக்கும் செல்கள் ஆகும். இது ஹைப்பர் பிக்மெண்டேஷனை தடுப்பது மட்டுமல்லாமல் சருமத்தை கெட்டியாக்கி, அமைப்பை மேம்படுத்துகிறது. கோடுகள் மற்றும் சுருக்கங்களை மென்மையாக்குகிறது மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துகிறது.

​காஃபைன் அடிப்படையிலான க்ரீம்

samayam tamil Tamil News Spot

காஃபின் அடிப்படையிலான கண் க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்துவது உங்கள் கண்களுக்கு கீழ் உள்ள இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தை குறைக்க வழிவகுக்கிறது. இது அப்பகுதியில் நீரேற்றத்தை அதிகரிக்கிறது. தோல் வீக்கம் மற்றும் கருமையான வட்டங்களை குறைவாக்கவும் இவை உதவுகிறது.

​வைட்டமின்கள் சேருங்கள்

samayam tamil Tamil News Spot

கருவளையங்களின் தோற்றத்தை குறைத்து சருமத்துக்கு ஆரோக்கியம் அளிக்க விரும்பினால் நீங்கள் வைட்டமின்களில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த தோல் பராமரிப்பு முறையை கொண்டிருப்பதும் அவசியம்.

வைட்டமின் சி நிறைந்த சீரம் கருவளையங்களை போக்க சரியானது. வைட்டமின் சி வழங்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு, ஹைப்பர் பிக்மெண்டேஷனை விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட செய்யும்.

​தூங்கும் போது இதை செய்யுங்கள்

samayam tamil Tamil News Spot

உங்கள் முதுகில் தூங்குவதை வழக்கமாக்குங்கள். அதாவது தூங்கும் போது குப்புற படுக்காமல் மல்லாந்து படுக்கும் வழக்கத்தை வைத்திருங்கள். குறிப்பாக காலையில் எழும் போது இருண்ட வீங்கிய கண்களுடன் எழுந்திருப்பவராக இருந்தால், உறங்கும் நிலையை மாற்ற முயற்சியுங்கள்.

இரவில் கண்களுக்கு கீழ் திரவம் தேங்குவதை தடுக்க தலையணை கூடுதலாக வைத்து தூங்குங்காள். காலப்போக்கில் கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம் குறைவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

​.மேக்-அப் ரிமூவரில் கவனம்

samayam tamil Tamil News Spot

மேக்- அப் செய்வதில் செலுத்தும் கவனம் மேக்- அப் ரிமூவ் செய்வதிலும் இருக்கட்டும். கண்களை சுற்றீயுள்ள பகுதி உணர்திறன் வாய்ந்தது. மென்மையானது. நீங்கள் மென்மையாக கையாள வேண்டும். கண்களுக்கு கீழ் உள்ள தோல் உடலில் மிக மெல்லியதாக இருக்கும். அதனால் எரிச்சல் அல்லது தோல் அழற்சியை உண்டாக்கும்.

Carrot Oil : முடி வேகமா வளரணும்னா கேரட் எண்ணெய் மட்டும் யூஸ் பண்ணுங்க! தயாரிப்பும் பயன்பாடும்!

வகையில் எதையும் செய்ய கூடாது. கண்களுக்கு கீழ் சருமத்தை சேதப்படுத்தாத காட்டன் பஞ்சை பயன்படுத்தவும். இரண்டு பக்கமும் முன்னும் பின்னுமாக தேய்ப்பதை விட ஒரே திசையில் மென்மையாக தேயுங்கள்.

பராமரிப்புகளை தாண்டி இதையெல்லாம் செய்து வந்தால் கருவளையம் மறைவதை பார்க்கலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.