Share on Social Media

தேயிலை அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது அடிப்படை வீக்கத்துக்கு உதவகூடும் என்கிறார். நீங்கள் மருந்துகளின் சிகிச்சையில் இருக்கும் போது நீங்கள் வலிநிவாரணிக்கு எடுத்துகொள்ளும் தேநீர் குறித்து ஆலோசிப்பது அவசியம். அப்படி உதவும் சிறந்த தேநீர் வகைகள் குறித்து அறிவோம்.

​இஞ்சி தேநீர்

வயிற்றுக்கோளாறுகளை தடுக்க இஞ்சி உதவும் என்பது போன்று இயற்கை தயாரிப்பு ஆராய்ச்சியில் 2016 ஆம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று கீல்வாதம் உள்ளவர்களுக்கு வீக்கம் மற்றும் நாள்பட்ட முழங்கால் வலியில் இஞ்சி நிரப்பலின் விளைவை மதிப்பீடு செய்தது.

நாற்றமுள்ள வாயை மணக்க வைக்கும் சோம்பு, இன்னும் என்னலாம் அற்புதம் செய்யுதுன்னு தெரிஞ்சுக்கங்க!

30 நாட்களுக்கு 25 மி.கி இஞ்சியை எடுத்துகொண்டார்கள். இவர்கள் வலி அளவு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அறிவித்தது. வெதுவெதுப்பான நீரில் சுமார் 10 நிமிடங்கள் இஞ்சியை ஊறவைத்து பிறகு கொதிக்க வைத்து தேநீராக்கி குடிக்கவும்.

இஞ்சி இரத்தத்தை மெலிவாக்க கூடியது. நீங்கள் இரத்த மெலிவு மருந்துகளை எடுத்துகொண்டால் அதிக அளவு இஞ்சி தேநீர் தவிர்ப்பது நல்லது.

​க்ரீன் டீ

samayam tamil Tamil News Spot

இதய ஆரோக்கியத்துக்கு மூளை ஊக்கியாக இருக்க உதவும் க்ரீன் டீ ஆன்டி ஆக்ஸிடண்ட் மூட்டு வலி முடக்குவாதத்தால் உண்டாகும் வீக்கத்தையும் குறையும். பிப்ரவரி 2016 ஆம் ஆண்டு வாத நோய் மற்றும் கீல்வாதத்தில் வெளியிடப்பட்ட விலங்கு ஆய்வு ஒன்றில் க்ரீன் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல், எபிகல்லோகாடெசின் 3- கேலேட் என அழைக்கப்படுகிறது.

இது மற்ற செல்லுலர் செயல்பாடுகளை பாதிக்காமல் ஆர்.ஏ விளைவுகளை தடுக்க உதவும். இந்த ஆய்வு விலங்களுகளில் நடத்தப்பட்டாலும் ஆராய்ச்சியாளர்கள் ஈஜிசிஜி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மாற்றாக இருக்கலாம். என்று நம்புகிறார்கள்.

​ரோஸ் ஹிப் டீ

samayam tamil Tamil News Spot

ஆரஞ்சு சிவப்பு பந்து ரோஜா செடிகள் பூக்காத போது அவற்றின் தண்டு மீது தோன்றும். இது வைட்டமின் சி செறிவூட்டப்பட்ட மூலமாகும். மேலும் இது நீண்ட காலமாக மூலிகை மருந்தாக பயன்ப்டுத்தப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய குடும்ப மருத்துவரால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில்பைட்டோகெமிக்கல்களில் ஒன்றான கேலக்டோலிபிட்கள், கீல்வாதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்களுக்கு நன்மைபயக்கும் ஆன்டிஃபின்மேட்டரி பண்புகளை கொண்டுள்ளது.

ஆய்வில் ரோஜா தண்டு தூள் தொடர்ந்து எடுத்துகொண்டவர்களுக்கு வலி மதிப்பெண்களை குறைத்தது வலி மாத்திரைகள் மாற்றாக இதை எடுக்கும் போது இரண்டு மடங்கு குணமாக வாய்ப்புண்டு என்கிறார்கள்.

இந்த ரோஜா தண்டு தூள் தேநீரில் புளிப்பு மற்றும் பழ தேநீர் உருவாக்குகிறது. இது பெரும்பாலும் செம்பருத்தி தேநீர் உடன் ஒத்து இருக்கலாம்.

​கருப்பு தேநீர்

samayam tamil Tamil News Spot

கருப்பு தேநீர் பைகள் குர்செடின் நிறைந்துள்ளது. இது ஒரு பயோஃப்ளேவனாய்டு ஆகும். இது அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியல் ஆவண காப்பகத்தில் வெள்யிடப்பட்ட 2015 ஆம் ஆண்டு குர்செடின் வீக்கத்தை குறைக்கிறது மேலும் விலங்கு குறித்த சோதனை பாடங்களில் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை அதிகரித்தது.

ப்ளாக் டீயில் காஃபைன் அதிகமாக இருக்கும். அது எப்படி தயாரிக்கிறது என்பதை பொறுத்து சில மருந்துகளின் செயல்திறனை பாதிக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

​வில்லோ பட்டை தேநீர்

samayam tamil Tamil News Spot

இது பழங்கால சீன மூலிகை. வலி நிவாரணி தீர்வு. இது ஆஸ்ப்ரின் போன்றவற்றுடன் ஒத்திருக்கிறது. இது மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தின் வில்லோ பட்டைகள் பயன்படுத்துவதை ஆதரிக்கும் மருத்துவ ஆய்வுகள் உள்ளன.

பைடோதெரபி ஆராய்ச்சியின் 2015 ஆம் ஆண்டு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, வில்லோ பட்டை சாறு பாலிபினால்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகளிலிருந்து உருவாகும் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி விளைவுகளை கொண்டுள்ளது. பல மருந்துகளை எடுத்துகொள்பவர்களுக்கு இந்த தேநீர் நல்ல சிகிச்சையாக இருக்க மருத்துவரின் ஆலோசனை தேவை.

ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பீட்டா- தடுப்பான்கள், கர்ப்பிணி பெண்கள்16 வயதுக்குட்பட்ட வில்லோ மரப்பட்டை தேநீர் எடுக்க கூடாது.

​நெட்டில் இலை தேநீர்

samayam tamil Tamil News Spot

நெட்டில் இலை தேநீர் கொட்டும் தொட்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை செடி. இது நூற்றாண்டுகளாக குறிப்பாக ஐரோப்பாவில் தசை மற்றும் மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் கீல்வாதத்த்க்கு சிகிச்சையளிக்கப்பயன்படுகிறது.

சிறுநீர் மங்கலாக இருந்தால் அது யானைக்கால் நோயின் அறிகுறியா, வேறு என்ன அறிகுறிகள் உண்டாகும்?

ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டில் மூலக்கூறுகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தொட்டால் எரிச்சலூட்டும் செயல்முறையை பாதிக்கும் முக்கிய நொதிகளில் ஒன்றை தடுக்கிறது.

பெரும்பாலான கடைகளில் நெட்டில்களை வாங்கலாம். கர்ப்பிணி பெண்கள், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த செடி மூட்டு வலிக்கு ஒரு மேற்பூச்சு தோல் சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *