Share on Social Media


நீங்கள் எழுந்தவுடன் குளித்துவிட்டு காலை உணவை ஏனோதானோ என்று அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறீர்களா. அப்படி போகிறவர் எனில் நீங்கள் நாள் முழுவதும் சோர்வாகத் தான் உணர்வீர்கள். காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். காலை உணவு தான் அன்றைய நாளுக்கான முக்கியமான உணவு ஆகும். ஆனால், நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உடனடியாக உணவை எடுத்துக் கொள்வது என்பது நல்ல யோசனையல்ல.

​காலை நேர உணவு

நீண்ட நேர ஓய்வுக்குப் பிறகு உங்களின் உடல் உள்ளுறுப்புகள் விழித்தெழுவதற்கும், அவற்றின் செயல்பாட்டைத் தொடங்குவதற்கும் தகுந்த நேரம் தேவை. அதனால் முழு உணவை எடுத்துக் கொள்வதற்கு பதில், வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சில உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க ஒரு சிறிய சிற்றுண்டியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். அதனை சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணிநேரம் கழித்து காலை உணவை உண்ணுங்கள்.

காலை உணவுக்கு முன் நீங்கள் சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள் என்ன என்று பார்ப்போம் வாங்க. .

​ஊறவைத்த பாதாம்

samayam tamil Tamil News Spot

பாதாமில் மாங்கனீஸ், வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆனாலும், நீங்கள் பாதாமை தவறாக எடுத்துக் கொண்டால் அதன் நன்மைகளை நீங்கள் இழக்க நேரிடும். எப்போதும் பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள். ஏனெனில், பாதாமின் தோலில் டானின் உள்ளது. அவை ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. நீங்கள் அவற்றை ஊறவைகும்போது, தோல் எளிதில் வெளியேறும். இதனால் சரியான ஊட்டச்சத்தை நீங்கள் பெறுவதோடு நாள் முழுவதும் உங்களை திருப்தியாக உணர வைக்கும்.

weight loss diet: ஆலியா பட் இந்த சிறுதானியத்தை அதிகமாக சாப்பிட்டுதான் உடல் எடையை குறைத்திருக்கிறார்

​சூடான நீர் மற்றும் தேன்

samayam tamil Tamil News Spot

சூடான நீருடன், தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். அதோடு, தேனில் உடலுக்குத் தேவையான கனிமங்கள், வைட்டமின்கள், பிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. வெறும் வயிற்றில் வெந்நீரில் தண்ணீருடன் தேன் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் தினசரி தேவைக்குத் தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்கவும் இந்த பானம் வழங்குகிறது.

​கோதுமைப்புல் பவுடர் (wheat grass)

-wheat-grass

உங்கள் உணவில் கோதுமைப் புல்லைச் சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை நீங்கள் பெற முடியும். இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து காலையில் சாப்பிட்டால் செரிமான அமைப்பின் செயல்பாடு மேம்படும். அத்துடன் மலச்சிக்கல் ஏற்படாமலும் இந்த பொடி தடுக்கும். மேலும், கோதுமைப் புல்லில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உங்கள் செல்களை பாதுகாத்து உங்களை இளமையாக வைத்திருக்க செய்யும்.

dates benefits: எடையை குறைக்க நினைப்பவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா? எந்த அளவு சாப்பிடலாம்?

​உலர் திராட்சை (raisins)

-raisins

உலர் பழமான திராட்சையில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. பாதாம் பருப்பைப் போலவே இதனையும் நீங்கள் இரவு முழுவதும் ஊற வைத்து விட்டு பின்னர் தான் சாப்பிட வேண்டும். ஏனெனில், இப்படி செய்வதன் மூலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்தலாம். உலர் திராட்சையில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்து இருப்பதால் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும். அதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை தணிக்கவும் இது உதவும்.

​பப்பாளி (papaya)

-papaya

பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தவும், சீரான குடல் இயக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவும் சிறந்த வழியாகும். ஆண்டு முழுவதும் எளிதாகக் கிடைக்கும் இந்த பப்பாளியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்க முடியும். வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்ட பின் உங்களின் காலை உணவை 45 நிமிடங்களுக்குப் பிறகு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

neem benefits: வேப்பிலையை மருந்தாக எப்படி பயன்படுத்த வேண்டும்? மருத்துவர் கூறும் வழிமுறைகள் இதோ…

​தர்பூசணி (watermelon)

-watermelon

தர்பூசணி பழங்களில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. உங்களின் காலை நேரத்தை தர்பூசணியில் இருந்து தொடங்குவது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும், பசியைத் தணிக்கவும் உதவும். தர்பூசணியில் அதிக அளவு லைகோபீன் உள்ளது. இது தான் இதயம் மற்றும் கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

weight loss tips: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பால் குடிக்கலாமா?

​சியா விதைகள்

samayam tamil Tamil News Spot

சிறிய விதையான சியா விதைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதனையும் பாதாம், உலர் திராட்சை போல இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும் திறன் கொண்டவை. இது எடை இழப்புக்கு உதவுகின்றன. அதனை ஊறவைக்கும் போது, அவற்றில் மேல் ஜெலட்டின் தன்மையை உருவாகின்றன. இவை செரிமான அமைப்புக்கு உதவும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *