Share on Social Media


மலச்சிக்கல் பிரச்சனை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாரபட்சமில்லாமல் தாக்கும் உபாதை ஆகும். இது தற்காலிகமானது தான். ஆரம்ப கட்டத்தில் இதை கவனித்து சரி செய்து விட்டாலே மீண்டும் வராமல் தடுக்க செய்யலாம்.

மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால் அது மூலம், செரிமானக்கோளாறு, அஜீரணமின்மை, குடல் பிரச்சனை என அடுக்கு சங்கிலியாய் பல பிரச்சனைகளை கொண்டு வரும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு உணவோடு வல்லாரை கீரையும் அருமருந்தாகும். மூன்று நாட்களில் இதன் பலன் உணர தொடங்கலாம்.

​காலைக்கடன்

மலம் கழிப்பதில் பிரச்சனை என்பது அசாதாரணமானதல்ல. காலையில் எழுந்தவுடன் காலை கடன் முடி என்று முன்னோர்கள் அறிவுறுத்துவார்கள். காலை கடன் என்பது முன் தினம் எடுத்துகொண்ட உணவில் இருக்கும் எஞ்சிய கழிவுகள் குடலிலிருந்து மலக்குடல் வழியாக வெளியேற வேண்டும்.

உடல் எடையை குறைக்க உதவும் அமுக்கிரான் பொடி எப்படி எடுத்து கொள்வது?

உடலில் கழிவுகள் தேங்காமல் இருந்தால் உடல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும். நோய் நொடிகள் எதுவும் இருக்காது. அன்றாட பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றில் முதன்மையானது மலம் கழித்தல் தான். ஆரோக்கியமாக இருக்கும் பலருக்கும் காலை எழுந்ததும் மலம் கழித்தால் தான் அன்றைய பொழுதே நல்ல விதமாக கழியும். இவர்கள் பெரும்பாலும் நோய் நொடியை சந்திக்கமாட்டார்கள்.

​மலம் கழிப்பதில் சிக்கல்

samayam tamil Tamil News Spot

மலம் கழிப்பதில் சிக்கல் என்பது தற்காலிகமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தற்காலிகமானது. ஆனால் இதை சரிசெய்வதும், நிரந்தரமாக மாற்றிகொள்வது அவர்களது தொடர் பழக்கத்தில் தான் உள்ளது.

காலை எழுந்தவுடன் மலத்தை வெளியேற்றிவிடவேண்டும். சிலர் மூச்சை இழுத்து பிடித்து மலத்தை முக்கி வெளியேற்றுவார்கள். அப்படியெல்லாம் அவசியமில்லை. சமயங்களில் காலை, மாலை அல்லது இரண்டு வேளையும் கூட மலம் வரலாம். இது பயப்பட வேண்டியதில்லை.

ஆனால் தொடர்ந்து இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று குழந்தைகள் போன்று மலம் கழிக்காமல் இருப்பது சிக்கலை குறிக்கும். இது தான் ஆரம்ப நிலை. இந்நிலை இருந்தால் மலச்சிக்கல் என்பதை உணரலாம்.

​மலச்சிக்கல் தீவிரம்

samayam tamil Tamil News Spot

மலச்சிக்கல் தீவிரமாகும் போது வழக்கமான நிலையில் மலம் வெளிவராமல் இருப்பது, மலம் அதிக இறுக்கத்துடன் போவது, மலம் வெளியேறினாலும் முழுமையாகாத உணர்வு, ஆசனவாயை அடைத்துகொண்டிருப்பது, வாரத்தில் மூன்று முறை மட்டுமே மலம் கழிப்பது என எல்லாமே மலச்சிக்கலின் தீவிரமான நிலைதான். இவை தொடரும் போது மலத்தில் இரத்தக்கசிவு உண்டாகும்.

பெரும்பாலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மலச்சிக்கலுக்கு அதிகம் ஆளாவதுண்டு. மலச்சிக்கலை தூண்டும் காரணங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

மலச்சிக்கலுக்கு காரணம்

samayam tamil Tamil News Spot

அவ்வபோது வரக்கூடிய மலச்சிக்கல் உணவு முறையால் இருக்கலாம். தொடர்ந்து நார்ச்சத்து நீங்கிய உணவுகள் எடுத்துகொள்வது, குப்பை உணவுகள், துரித உணவுகள், அவசரத்தில் மலம் கழிக்காமல் போவது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது.உடற்பயிற்சி இல்லாமல் உடலுக்கு உழைப்பை தராமல் இருப்பது, காய்ச்சல், வாந்தி, பசியின்மை, போன்ற நேரங்களில் மலச்சிக்கல் உருவாகலாம். இவையெல்லாம் தான் தற்காலிகமான காரணங்கள்.

இதை சரிசெய்ய உணவு முறையும் மூலிகையும் போதுமானது. அவ்வபோது வரும் மலச்சிக்கலை மூன்று நாட்களில் சரி செய்ய உதவும் முன்னோர் கால மருந்து வல்லாரை. இதை எப்படி எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

​மலச்சிக்கலுக்கு வல்லாரை பொடி

samayam tamil Tamil News Spot

மலச்சிக்கலை போக்க எத்தனை வகை மருந்துகள் இருந்தாலும் வல்லாரையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் மூன்று நாட்களில் பலன் கிடைக்க செய்யும். வல்லாரை இலையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். இதை 100 கிராம் அளவு எடுக்க வேண்டும். இதில் அதிமதுரப்பொடி (நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) 20 கிராம் சேர்த்து நன்றாக கலந்து எடுக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளவும்.

மூல நோய் ஆரம்ப நிலையா, இதையெல்லாம் செய்தா குணப்படுத்திடலாம்!

மலச்சிக்கல் உண்டாகும் போது இந்த பொடியை 1 டீஸ்பூன் அளவு எடுத்து நாட்டுச்சர்க்கரை சம அளவு கலந்து சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு தேனில் கலந்து குழைத்து கொடுக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இரவு நேரத்தில் இதை குடிக்க வேண்டும். மலச்சிக்கல் காணாமல் போகும்.

ஒரு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை சாப்பிடலாம். எந்த பாதிப்பும் பக்கவிளைவும் கிடையாது. மாறாக கூடுதல் நன்மை பெறலாம். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இந்த பொடி தாங்க கூடும். மலச்சிக்கல் வரும் போதெல்லாம் இந்த பொடியை எடுத்து வந்தால் மூன்று மாதங்களில் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் தடுக்கப்படும். இதனோடு தினசரி போதுமான நீர், நார்ச்சத்து உணவு, காய்கறீகள், பழங்கள் போன்றவையும் அவசியம் எடுத்துகொள்ளுங்கள்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *